Category: Your Kattankudy
-
73 வருடங்களின் பின்பு மீட்கப்பட்ட ஜேர்மனி யுத்த விமானம்
-MJ லண்டன்: இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் ஜேர்மன் விமானப்படைக்குச் சொந்தமான டோர்னியர்-17 (Do-17) ரக பொம்பர் -குண்டு வீச்சு விமானம் ஆங்கில கால்வாயில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.
-
மத்தல விமான நிலையத்தில் இடம்பெற்ற முதலாவது கைது!
-AF-71 கொழும்பு: மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இன்று புதன்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். தங்க ஆபரணங்களையும் இரத்தினக்கற்களையும் பேங்கொக்கிலிருந்து கடத்திவர முயன்ற ஒருவரே இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்க எதிர்ப்பு!
கொழும்பு: 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள முயற்சி தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (12) எழுத்து மூலம் தமது எதிர்ப்பை சமர்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
-
மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய வியாபாரி கைது
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய் கிராமத்தில் 13 வயதான சிறுமியொருவரை வல்லுறுவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
பிரித்தானிய விசா விண்ணப்பத்துக்கான துரித சேவை அறிமுகம்
-MJ கொழும்பு: பிரித்தானியா, இலங்கையில் ஒரு புதிய அதிவேகப்பாதை விஸா சேவையொன்றை இம்மாதம் 24 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மூலம் விண்ணப்பதாரிகள் வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை என்பதாக பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
பொலன்னறுவையிலிருந்து மாடுகளை எடுத்து செல்வதற்கு தடை!
கொழும்பு: பொலன்னறுவையிலிருந்து இறைச்சிக்காக மாடுகளை எடுத்துச் செல்வது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவிருக்கின்றது. இதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மாவட்டச் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.
-
தமிழ்த்தேசியத்திலிருந்து ஷூறா சபை – ஜுனைட் நளீமி
நேற்றய தினம் இராணுவ அதிகாரி ஒருவரை நிகழ்வொன்றில் சந்திக்க நேர்ந்தது. எதிர்வரும் வாரம் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்க விரும்புவதாகவும் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
-
13வது சீர்திருத்தம் என்ற போர்வையில் சிறுபான்மை இனங்களுக்கு மத்தியில் இனமுறுகலை சில தீய சக்திகள் உண்டுபண்னுகின்றன: காத்தான்குடியில் அமைச்சர் டளஸ்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் மக்கள் இன மத வேறுபாடின்றி சமாதானமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நல்ல சூழலில் 13வது சீர்திருத்தம் என்ற போர்வையில் சிறுபான்மை இனங்களுக்கு மத்தியில் இனமுறுகலை உண்டுபண்ணி அதில் சில தீய சக்திகள் குளிர்காய நினைக்கிறது.அதற்கு எந்த மதத்தவர்களும் ஒரு போதும் அனுமதி வழங்கக் கூடாது என இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
-
மத்திய கிழக்கில் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் பணிப்பெண்கள்
டுபாய்: வீட்டு வேலை செய்வதற்காக அரபு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமையான சித்ரவதைகள் பற்றி செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. அரபு நாடுகளுக்கு சென்றால் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை ஏழ்மை நிலையில் ஏனைய நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
-
கிழக்கு மக்களின் நன்மை கருதி மாகாண சபையில் பொது மக்கள் முறைப்பாட்டுக் குழு அங்குரார்ப்பணம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாண பொது மக்கள் முறைப்பாட்டுக் குழுவொன்றை ஸ்தாபித்துள்ளது. இக்குழுவின் தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டபிள்யு. ஜீ. எம். ஆரியவதி கலப்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஓட்டமாவடி நதா சமூக மேம்பாட்டு ஒன்றியத்தினால் திண்மக்கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சி திட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: ஓட்டமாவடி நதா சமூக மேம்பாட்டு ஒன்றியத்தினால் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரனையுடன் வாழைச்சேனை கோறனைப்பற்று, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு ஆகிய இரு பிரதேச சபைகளையும் ஒன்றினைத்து திண்மக்கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சி திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது.
-
கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பாக எந்த விதமான பத்திரிகையாளர் மாநாடும் இதுவரை நடாத்தப்படவில்லை – எம்.எஸ்.உதுமாலெப்பை
பஹ்மி கிழக்கு மாகாணசபையின் மாதாந்த கூட்டம் கடந்த 21.05.2013ம் திகதி தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது. தேநீர் இடைவெளிக்காக சபை