ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்க எதிர்ப்பு!

slmc[1]கொழும்பு: 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள முயற்சி தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (12) எழுத்து மூலம் தமது எதிர்ப்பை சமர்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பில் உள்ள சந்தர்ப்பத்தை தடுப்பது, மாகாண சபையோடு தொடர்புடைய சட்டமூலம் ஒன்றை நிறைவேற்ற அனைத்து மாகாண சபைகளிலும் அனுமதி பெறாது பெரும்பான்மை சபைகளில் அனுமதி பெறுதல் போன்ற சட்டத் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த திருத்தம் அமைச்சரவையில் சமர்பிக்கவிருந்த போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் வாசுதேவ நாணயக்கார கட்சி எதிர்ப்பு வெளியிட்டதால் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்ப்ட்டுள்ளது.  எனினும் புதிய சட்டத்திருத்தத்திற்கு தாம் தொடர்ந்தும் எதிர்ப்பு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார். -AD

Published by

Leave a comment