Category: Your Kattankudy
-
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சினால் காத்தான்குடி பாலமுனை பிரதேசத்துக்கு நவீன ‘டை’ நிலையம்
– A.R. மபூஸ் அஹமட் JP (கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு) கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், கைத்தறி நூல்களுக்கு டையிடும் நவீன நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
-
காப்புறுதி செய்யத் தவறும் மீனவர் கடலுக்கு செல்லத் தடை
கொழும்பு: கடற்றொழிலாளர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காப்புறுதி திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்துகொள்ளாத மீனவர்கள் எவரும் ஜனவரி முதல் கடற்றொழிலுக்கு செல்ல முடியாது என்ற நடைமுறை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
-
தொடர் மழை: மேற்கிந்திய அணி ஒரு ஓட்டத்தால் பரிதாபத் தோல்வி!
-MJ லண்டன்: சற்று முன்னர் இடம்பெற்று வந்த ஐ.சி.சி. கிண்ண சம்பியன்ஸ் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும் தென்னாபிரிக்காவும் விளையாடி இருந்தன. போட்டி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பிருந்து மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது. இதனால் 31ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
-
மாத்தளையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பிரபல கல்லூரி மாணவிகள்
மாத்தளை: மாத்தளையிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியொன்றின் மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.
-
உலகின் மிகவும் வயதான மனிதராக இலங்கையைச் சேர்ந்த 116 வயது பெண்!
கொழும்பு: உலகின் மிகவும் வயதான மனிதராக இலங்கையைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியை கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது. உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா கடந்த 12ம் நாள் மரணமானதையடுத்தே, இலங்கையைச் சேர்ந்த அப்புலானந்த உக்கு உலகின் மூத்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
முஸ்லிம் எய்ட் ஏற்பாட்டில் சேருவில, கந்தளாய் மாணவர்களுக்கு கண்பரிசோதனையும் இலவச மூக்குக் கண்ணாடி வழங்குதலும்
– பஹ்மியூஸூப் கந்தளாய்: கிராமப்புறங்களில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் வறுமை, போசாக்கின்மை, அறியாமை போன்ற காரணங்களினால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இவர்கள் பல்வேறு கண்பார்வைக் குறைபாடுகளினால் துன்புற்று வருகின்றனர் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
-
பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் முதன்முதலாக ஐரோப்பாவுக்கு வெளியிலான மரபணுக் கலப்பு!
லண்டன்: பிரிட்டிஷ் முடிக்குரியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் இளவரசர் வில்லியம்மின் தாய் வழி மூதாதையர் ஒருவர் இந்தியர் என மரபணுப் பரிசோதனைகள் காட்டியுள்ளதாக, பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
-
முஸ்லிம் பெண்ணை போன்று வேடமணிந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் கைது
மட்டக்களப்பு: முஸ்லிம் பெண்ணைப் போன்று அபாயாவை அணிந்து தனியார் வாகனம் ஒன்றில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியில் இருந்து கல்முனைப் பகுதிக்கு தப்பிச் சென்றுக்கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
13 வது திருத்தச் சட்டமூலம்: பலத்த வாக்குவாதங்களுக்குள் அமிழ்ந்த அமைச்சரவை!
கொழும்பு: 13 வது திருத்தச் சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களைக் கொண்டு வருவது தொடர்பில் நேற்றைய அமைச்சரவையில் ஆராயப்பட்டபோது, அங்கு வாதப்பிரதிவாதங்களும் வாய்த்தர்க்கங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்களான விமல் வீரவன்சவுக்கும் டியு குணசேகரவுக்குமிடையில் பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
-
புத்தளத்தில் நேற்றிரவு வீடொன்றிற்குள் இரு யுவதிகளுடன் இருந்த பிக்கு கைது
புத்தளம்: சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த பௌத்த பிக்கு, இரு யுவதிகள் மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
அஸ்ரபின் கொலையை ஹக்கீம் மீது திசைதிருப்பம்?
கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர் எம்.எச்.எம் அஷ்ரப்பின் கொலைக்கும், தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றக்கொண்டமைக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
-
இரணைமடு வான்புலிகளின் முன்னாள் ஓடுதளத்தை அரசாங்கம் நாளை திறக்கிறது
கிளிநொச்சி: இரணைமடுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுதளம் இலங்கை விமானப்படையினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஓடுதளம் சனிக்கிழமை 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது.