Category: Your Kattankudy
-
உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் மௌலவிமார்களுக்கு செய்யும் அநியாயம்- முஸ்லிம் உலமாக் கவுன்சில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் காத்தான்குடியில் அமையப்பெறும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் பாராட்டுக்குரியதாகினும் இதன் மூலம் உலமாக்களுக்கு அநியாயம் நடப்பதாகவே தெரிகிறது என அகில இலங்கை முஸ்லிம் உலமா கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
-
சூரிய சக்தி மூலம் மின் விளக்குகளை ஒளிர வைக்கும் திட்டம்
கொழும்பு: நாட்டின் பிரதான நகரங்களில் ஒளிரும் மின் விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர வைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று நுகேகொடை வாராந்த சந்தைக்கு அருகில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும். சுற்றாடல் மற்றும் மீள் உற்பத்தி வலுசக்தி அமைச்சு இத்தகவலை தெரிவித்துள்ளது.
-
இலங்கையில் முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் உருவாக இடமளிக்க மாட்டோம்: பொதுபலசேனா
கொழும்பு: இலங்கை பெளத்த சிங்கள ராஜ்ய நாடாக இருப்பதனால் இங்கு முஸ்லிம்களுக்கென்றொரு பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் உதவியுடன் உருவாகுவதை பொதுபலசேனா ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்திற்கு முன்னால் இடம்பெற்ற பல்கலைக்கழக கல்லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கையில் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன எனும் பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் மன்னர் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 11-06-20132 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
-
ரிதிதென்ன பல்கலைக்கழக கல்லூரி காத்தான்குடியில் ஒப்பந்தம் கைச்சாத்து
*12 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு *பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கையொப்பம் காத்தான்குடி: மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்னவில் அமைக்கப்படவிருக்கும் மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கு முதலிடவிருக்கும் சவூதிய அரேபியாவின் முன்னணி முதலீட்டாளர் அஷ்- ஷெய்க் யஹ்யா அப்துல் அஸீஸ் அல் ராஷித் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
-
மு. கா. ஆட்சியின் கீழான கல்முனையில் அக்கட்சியின் உறுப்பினர்களுக்கே அச்சுறுத்தல் எனும் போது ஏனைய கட்சிக்காரார்களின் நிலை எவ்வாறிருக்கும்?
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ. எம். பறகத்துள்ளாவின் வீட்டின் மீதான குண்டுத்தாக்குதலை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது சம்பந்தமாக முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
-
காத்தான்குடி நகர சபையின் அவசர சபை அமர்வு இன்று
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் அவசர சபை அமர்வு 10-06-2013 இன்று திங்கட்கிழமை பி.பகல் 3.மணிக்கு காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
-
பிரிட்டிஷ் குடியேற்றக் கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை
லண்டன்: பிரிட்டிஷ் பிரஜைகள் தமது குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளிலிருந்து அழைத்துவந்து குடியிருப்பதில் உள்ள குறைந்தபட்ச வருமானம் ரீதியான கட்டுப்பாடுகளை மீள் பரிசீலனை செய்யுமாறு குடிவரவு தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவொன்று கேட்டுக்கொண்டுள்ளது.
-
புயல்-மழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!
கொழும்பு: கடந்த சனிக்கிழமை அதிகாலை திடீரென வீசிய புயலுடன் கூடிய மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. காணாமல்போன 30 மீனவர்கள் தேடப்பட்டுவருகின்றனர்.
-
காத்தான்குடி நகரசபையின் சபை அமர்வில் கலந்து கொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த சில மாதங்களாக காத்தான்குடி நகர சபையில் இடம்பெறும் சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் அழைக்கப்படாமல் இருந்து வந்தனர்.
-
அமரா கல்லூரி, பிரைட் டியூசன் நிலையங்களுக்கு இடைக்காலத் தடை!
மட்டக்களப்பு: செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரபலமான டியூசன் நிலையங்களுக்கு பிரதேச சிறுவர் பாதுகாப்பு பிரிவினரினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை தேசிய கீத விவகாரம்: தவருக்கு வருத்தம் தெரிவித்தது ஐ.சி.சி
லண்டன்: ஐ.சி.சி. சம்பியன்ஸ் லீக் கிரிக்கட் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட தவறுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது.