ஓட்டமாவடி நதா சமூக மேம்பாட்டு ஒன்றியத்தினால் திண்மக்கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சி திட்டம்

???????????????????????????????பழுலுல்லாஹ் பர்ஹான்

ஓட்டமாவடி: ஓட்டமாவடி நதா சமூக மேம்பாட்டு ஒன்றியத்தினால்  யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரனையுடன் வாழைச்சேனை கோறனைப்பற்று, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு ஆகிய இரு பிரதேச சபைகளையும் ஒன்றினைத்து திண்மக்கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சி திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது.

இந் திட்டத்தின் மூலம் தமிழ்,முஸ்லிம் என இரண்டரை கலந்து நிறுவாக கடமைகளை மேற் கொள்ளும் இரு பிரதேச சபை எல்லை பரப்பினூள் வாழ்கின்ற மக்களிடம் இன முரன்பாடுகளை களைத்து ஒற்றுமை பட்ட இலங்கையில் இப் பிரதேசத்தில் கடந்த 30 வருட யூத்த காலத்தில் இருத்த இன ரீதியான பழிவாங்களையும் முரன்பாடுகளையும் களைத்து சகோதரத்துவ உறவு மேம்படவும் இத் திட்டம் முதன் முறையாக இரு பிரதேச சபைகளிடம் நடை முறைப்படுத்தப்பட்டது.

இரு பிரதேச சபை பகுதிகளிலும் அன்றாடம் சேர்கின்ற திண்மக்கழிவுகளை எவ்வாறு முகாமைத்துவம் பன்னுவது அக்கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சினை இரு சபைகளுக்கிடையில் இருத்து வந்தது  இப் பிரச்சினையை மையமாக கொண்டும் இதனூடாக மக்கள் மத்தியிலும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியிலும் செல்வாக்கு செலுத்தி இன முரன்பாடுகளை களைய திட்டம் வகுக்கப்பட்டதற்கமைய மூன்று மாத காலம் உரிய முறையில் திண்மக்கழிவு முகாமைத்துவம் எவ்வாறு மேற் கொள்வது என்ற திட்டத்தினை சர்வதேச ரீதியில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் விஷேட நிபுனத்துவம் பெற்ற மாலக தஸாநாயக்க அவர்களின் கற்றல் கற்பித்தல் முறைமைக்கு அமைவாகவும் திண்மக்கழிவு முகாமைத்து திட்டம் தயாரிக்கப்பட்டது.

இரு பிரதேச சபை பகுதிகளில் காணப்படும் வளங்களுக்கமைவாக திட்டங்கள் வகுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை பிரதேச சபை பகுதியை நோக்கினால் பாசிகுடா ஹோட்டல் விடுகளில் இருத்து கிடைக்கப்பெறும் கழிவுகளை  எவ்வாறு கையாழுவது அது போலவே கழிவுகளில் ஆபத்தான கழிவுகளும் உண்டு உதாரணமாக வைத்தியசாலையில் இருத்து பெறப்படும் கழிவுகள் இக் கழிவுகளை எவ்வாறு முகாமைத்துவம் பன்னுவது என்றும் மூன்று மாத கற்றலின்னூடாக பிரதேச சபை பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் சபையின் தவிசாளர்கள் செயலாளர்களையும்,கிராம சேவையாளர்கள்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள,மத குருமார்கள், பொதுமக்களையும்  உள்ளடக்கியதாக 100 நூறு பயனாளிகளாக கொண்டு இத்திட்டம் குறித்த  பகுதியில் நடை முறைப்படுத்தப்பட்டது. இறுதியில் இலங்கையில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை சிறப்பாக மேற் கொண்டு வரும்   வெலிகம பிரதேச சபைக்கு மூன்று நாள் களப்பயிற்சி சுற்றுலா மூலம் 100 நூறு பயனாளிகளையும் கூட்டி சென்று கான்பித்த பிற்பாடு முறையான திட்டம் ஒன்றினை தயாரித்து இரு பிரதேச சபைகளுக்கும் வழங்கப்பட்டது.

பட விளக்கம்:

தயாரிக்கப்பட்ட திட்ட கோவையினை திண்மக்கழிவு முகாமைத்து நிகழ்ச்;சி திட்ட இனைப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு  பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்களிடமும் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எம்.சஹாப்தீன் அவர்களிடம் திண்மக்கழிவு முகாமைத்து நிகழச்;சி திட்ட இனைப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் நதா அமைப்பின் தலைவர் ஏ.எம்.நௌபார் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி ஆகியோர்  கையளிப்பதனை படங்களில் கானலாம்.

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment