கிழக்கு மக்களின் நன்மை கருதி மாகாண சபையில் பொது மக்கள் முறைப்பாட்டுக் குழு அங்குரார்ப்பணம்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

Eastern_Province_Flag_(SRI_LANKA)[1]திருகோணமலை: கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாண பொது மக்கள் முறைப்பாட்டுக் குழுவொன்றை ஸ்தாபித்துள்ளது. இக்குழுவின் தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  டபிள்யு. ஜீ. எம். ஆரியவதி கலப்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.தண்டாயுதபாணி, உறுப்பினரும் மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெவ்லை, ஏ.எம்.ஜெமீல், என்.ஜி.எம். ஜயந்த விஜேசேகர, ஆரிப் சம்சுதீன், ரி. நவரெட்னராஜா, ஏ.எல்.எம்.நஸீர், ரி.கலையரசன் மற்றும் இரா.துரைரெட்ணம் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை பிரதேச சபைகளில் வைக்கப்பட்டிருக்கும் பொது மக்கள் முறைப்பாட்டுப் பெட்டியினுள் இடுவதன் மூலமோ அல்லது தலைவர், பொது மக்கள் முறைப்பாட்டுக்குழு, பேரவைச் செயலகம், உட்துறைமுக வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்புவதன் மூலமோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களுக்கு நேரடியாக கையளிப்பதன் மூலம் தமது முறைப்பாட்டினைத் தெரிவிக்கலாம்.

பொது மக்கள் முறைப்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டு பொதுமக்களின் முறைப்பாடுகளை ஆராய்ந்து சிறந்த தீர்வை பெறுவதே இதன் முக்கிய அம்சமாகும்.

பொதுமக்களின் நலன் கருதியே குறித்த பொது மக்கள் முறைப்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment