லண்டன்: இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் ஜேர்மன் விமானப்படைக்குச் சொந்தமான டோர்னியர்-17 (Do-17) ரக பொம்பர் -குண்டு வீச்சு விமானம் ஆங்கில கால்வாயில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.
1940, ஓகஸ்ட் 26ம் திகதி பிரித்தானிய படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட இக் குண்டு வீச்சு விமானம், இங்கிலாந்தின் கெண்ட் பகுதியில் ஆங்கிலக் கால்வாயில் கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட இவ்விமானத்ததை மீள் வடிவமைத்து, பிரித்தானியாவின் அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைத்து, அதன் மூலம் பெறப்படும் நிதியை தேசிய இராணுவ நன்கொடைக்கு வழங்குவது என இங்கிலாந்து தெரிவித்திருக்கின்றது.




Leave a comment