பொலன்னறுவையிலிருந்து மாடுகளை எடுத்து செல்வதற்கு தடை!

cowகொழும்பு: பொலன்னறுவையிலிருந்து இறைச்சிக்காக மாடுகளை எடுத்துச் செல்வது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவிருக்கின்றது. இதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மாவட்டச் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போது, பொலன்னறுவையிலிருந்து தினமும் சுமார் 250 மாடுகளை இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலை தொடருமாயின் பொலன்னறுவையில் மாட்டு வளம் அழிந்து விடும். அதனால் அவ்வளத்தைப் பாதுகாக்கவென துரித நடவடிக்கை எடுக்குமாறும் அவர் மாவட்டச் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

– தினகரன்

Published by

Leave a comment