Author: yourkattankudy.com
-
சல்மா ஹம்சா இணைப்பாளராக நியமனம்
காத்தான்குடி: நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் அமைச்சர் றஊப் ஹக்கீமின் இணைப்பாளராக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் திருமதி சல்மா ஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சவூதி அரேபியாவின் கிங் பைசல் விருதை டாக்டர் ஜாகிர் நாயக் பெற்றுக் கொன்டார்
AHAMED DEEDAT ரியாத்: ரியாத்தில் இடம்பெற்ற கிங் பைசல் விருது வழங்கும் விழாவில் சவூதி மன்னர் சல்மான் இப்னு அஜிஸ் அவர்களினால் இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
-
உமர் பாலர் பாடசாலை பாலர்களுக்கு NFGGயினால் கற்றல், விளையாட்டு உபகரணங்ககள் அன்பளிப்பு
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: புதிய காத்தான்குடி அப்ரார் பகுதியில் இயங்கிவரும் உமர் சனசமூக நிலையத்தின் பாலர் பாடசாலை பாலர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் (NFGG) கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்ககள் வழங்கி வைக்கப்பட்டன.
-
கலைகளைப் பயன்படுத்தி சமூக மாற்றத்தை துரிதப்படுத்தும் சக்தி இளைஞர்களுக்கே அதிகம் உண்டு
– எம்.ரீ.எம்.பாரிஸ் கண்டி: சமூகத்தில் உள்ள சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதில் இளைஞர்களை உள்வாங்குவது இன்றியமையாததாகும். சமூக மாற்றத்தை துரிதப்படுத்தும் கலைத்துவமிக்க ஆற்றல் இளைஞர்களிடமே அதிகம் உள்ளது என பேராதனைப் பல்கலைக்கழக தொடர்பாடல்துரை பேராசிரியர் டப்ளிவ் வணிகசுந்தர தெரிவித்துள்ளார்.
-
காத்தான்குடியில் அல் அக்ஸா வடிவில் அமைக்கப்பட்டு வரும் பள்ளிவாயலின் இரண்டாம் கட்ட வேலைகள் எதிர்வரும் 09.03.2015 ஆம் திகதி ஆரம்பம்
டீன் பைரூஸ் காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல், அல்அக்ஸா வடிவிலான பள்ளிவாயலின் இரண்டாம் கட்ட வேலைகளை உடன் ஆரம்பிப்பது தொடர்பாக பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் பொறியியலாளர்களுடனான விசேட சந்திப்பு ஒன்று 02.03.2015 திங்கள் பள்ளிவாயலில் இடம் பெற்றதது. இதன் போது முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
-
அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும், இலங்கைக்கான ஜேர்மன் நாட்டுத் தூதுவருக்கிடையிலான சந்திப்பு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும், இலங்கைக்கான ஜேர்மன் நாட்டுத் தூதுவருக்கிடையிலான சந்திப்பு ஒன்று ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை கட்டிடத்தில் நடைபெற்றது.இதில் புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை அமைச்சர் தூதுவருக்கு விளக்கினார்.
-
ஏறாவூரில் உணவகங்கள் திடீர் சோதனை!
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: நேற்று (02.03.2015) ஏறாவூர் சுகாதார வைத்திய அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
-
புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்த ஆசிரியர்களை நியமித்து தருமாறு கோரி பெற்றோர்கள் கல்வி அலுவலகத்துக்கு வருகை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்த ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி நேற்று 2 திங்களன்று ஏறாவூரிலுள்ள மத்திய கல்வி அலுவலகத்துக்கு முன்னால் பெற்றோர்கள் திரண்டு தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
-
உலகின் ஏழ்மையான ஜனாதிபதி விடைபெற்றார்
மொடவீடியோ: உலகின் மிக ஏழ்மையான ஜனாதிபதி என வர்ணிக்கப்படும் உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிகா, தனது தவணைக் காலம் முடிந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிக் கொண்டார். புதிய ஜனாதிபதியாக மருத்துவரான டபரே வஸ்குஸ் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.
-
கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அரசியல் நெருக்கடி
திருகோணமலை: கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு வழங்கிய ஆதரவை ஒன்பது உறுப்பினர்கள் வாபஸ் பெற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 09 உறுப்பினர்களே தாங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித்ததோடு, ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவிடம் வாபஸ் பெறும் கடிதத்தையும் கையளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
-
ஊடகவியலாளர் முஸ்தபா மௌலவியை தாக்கும் முயற்சிக்கு எமது கண்டனம்
காத்தான்குடி: பொது நிறுவணங்கள், பள்ளிவாயல்கள் சம்மேளனம் என பல்வேறுபட்ட அமைப்புகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு பல ஆண்டு காலமாக சமூகப்பணி ஆற்றிவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா (பலாஹி) அவர்களை அரசியல் பிண்னணியில் தாக்க முற்பட்ட செயலுக்கு எமது இனையத்தளம் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துக்கொள்கிறது.
-
குருக்கள்மடம் இனப்படுகொலை விசாரிக்கப்பட வேண்டும் என நீதி அமைச்சருக்கு சிப்லி பாரூக் கடிதம்
டீன் பைரூஸ்/ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் காத்தான்குடி: கடந்த 30வருட கால யுத்ததின் போது நேரடியாக யுத்தத்தில் பங்கேற்காத முஸ்லிம் சமூகம் அநியாயமாக இனப்படு கொலைக்கு உட்படுத்தப்பட்டதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. காத்தான்குடியில் பள்ளிவாயல்களில் 100க்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டதும், அளிஞ்சிப் பொத்தானை போன்ற இடங்களில் இனச்சுத்திகரிப்பு செய்தது மட்டுமல்லாமல், கிழக்கலே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அதேபோல் வடக்கில் இருந்தும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.