காத்தான்குடியில் அல் அக்ஸா வடிவில் அமைக்கப்பட்டு வரும் பள்ளிவாயலின் இரண்டாம் கட்ட வேலைகள் எதிர்வரும் 09.03.2015 ஆம் திகதி ஆரம்பம்

unnamed1டீன் பைரூஸ்

காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல், அல்அக்ஸா வடிவிலான பள்ளிவாயலின் இரண்டாம் கட்ட வேலைகளை உடன் ஆரம்பிப்பது தொடர்பாக பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் பொறியியலாளர்களுடனான விசேட சந்திப்பு ஒன்று 02.03.2015 திங்கள் பள்ளிவாயலில் இடம் பெற்றதது. இதன் போது முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

கடந்த காலங்களில் மேற்படி பள்ளிவாயலின் கட்டிட வேளைகள் தாமதமானது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் எதிர்கால வேளைகள் எவ்வாறு இடம் பெற வேண்டும் என்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் MLAM. ஹிஸ்புல்லாஹ் கருத்தக்களை தெரிவித்தார்.

மேற்படி சந்தப்பின் போது சீ.ஈ.சீ.பீ. கம்பனியின் பொறியியலாளர் ரீ. ரகுராமன், பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக், எம்.றஊப், பள்ளிவாயலின் தலைவர் யு.எல்.ஏ. ஹக்கீம் (ஓ. பெ. ஆசிரியர்), ஏ.எல்.ஏ. ஹஸன் (ஓ. பெ. ஆசிரியர்), உட்பட பள்ளிவாயல் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மஹிந்த அரசினால் ஒதுக்கப்பட்ட சுமார் நான்கு கோடி அறுபது இலட்சம் ரூபாய் பணம் தற்போது  கிடைக்கப் பெற்று இருக்கின்ற நிலையில் அதனை சுமார் ஆறு மாத காலத்திற்குல் பயன்படுத்தி கட்டிட வேளைகளை துரிதப்படுத்த வேண்டும் என அண்மையில் காத்தான்குடிக்கு விஜயம் செய்த முஸ்லிம் விவகாரக செயலாளர் எம். மஜீட் தெரிவித்திருந்தார்.

அதேவேளை ஹிறா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் 87 மில்லியன் ரூபாய்க்கான காசோலையினையும் முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் பள்ளி நிர்வாகிகளிடம் அண்மையில் கையளித்தமையும் குறிப்பிடத்தகது.

பள்ளிவாயல் கட்டிட வேலைகளின் பணிகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு வேலைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாக முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பள்ளிவாயல் கட்டிட வேலைகளை எத்தனை மாத காலத்திற்குள் முடியுமான அளவு கட்டித்தர முடியும் என சமூகமளித்திருந்த சீ.ஈ.சீ.பீ. கம்பனியின் பொறியியலாளர் ரீ. ரகுராமனிடம் ஹிஸ்புழ்ழாஹ் கேட்ட போது, ஏதிர்வரும் 09.03.2015 திங்கற்கிழமை நாம் எமது வேலைகளை ஆரமிபிக்க இருப்பதாகவும், அதற்கான சகல ஏற்பாடுகளையும் தாங்கள் இப்போதிருந்தே மேற் கொண்டு வருவதாகவும், எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் முதலாம், இரண்டாம் மாடிகளுக்கான வேலைகள் பூர்ததி செய்து தர முடியும் என திரு ரீ.ரகுராமன் தெரிவித்தார்.

போதியளவு பணம் பள்ளிவாயலில் இருக்கின்றது.  எனவே, காலத்தை கடத்தாது வேலைகளை துரிதமாக மேற் கொள்ளுமாறும் அதிகாரிகளை பணித்ததோடு, பள்ளிவாயலுக்கு தேவையான மேலும் பண உதவிகளை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் ஹிறா பௌன்டேசன் ஊடா பெற்றுத் தருவதாகவும் மு. பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்தார்.

காத்தான்குடி வரலாற்றில் ஒரு தனி இடத்தை பிடிக்கப் போகும் இப்பள்ளிவாயல் எவ்வாறு அமையப் போகின்றன என்பது தொடர்பான தனது கனவை பொறியியலாளர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் தெரியப்படுத்தினார் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.ஏ. அவர்கள். 

This slideshow requires JavaScript.

Published by

One response to “காத்தான்குடியில் அல் அக்ஸா வடிவில் அமைக்கப்பட்டு வரும் பள்ளிவாயலின் இரண்டாம் கட்ட வேலைகள் எதிர்வரும் 09.03.2015 ஆம் திகதி ஆரம்பம்”

  1. Missing (Escape) Shibly…………… Paavam

Leave a comment