ஊடகவியலாளர் முஸ்தபா மௌலவியை தாக்கும் முயற்சிக்கு எமது கண்டனம்
காத்தான்குடி: பொது நிறுவணங்கள், பள்ளிவாயல்கள் சம்மேளனம் என பல்வேறுபட்ட அமைப்புகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு பல ஆண்டு காலமாக சமூகப்பணி ஆற்றிவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா (பலாஹி) அவர்களை அரசியல் பிண்னணியில் தாக்க முற்பட்ட செயலுக்கு எமது இனையத்தளம் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துக்கொள்கிறது.
சமூகப்பணி செய்கின்றவர்களிடம் பொறுமை காத்தல் என்ற அம்சம் அதிகமாகவே காணப்படல் வேண்டும்.
பொறுமை என்பது ஈமானோடு கலந்த விடயமாகும். பொறுமை இல்லாதவன் சமூகப்பணி செய்ய தகுதி இல்லாதவனாகவே கருதப்படுவான்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா (பலாஹி)
இல்மை கற்றுக்கொண்ட ஓர் உலமா இவ்வாறான காடைத்தனத்தை ஓர் பொதுச் சபையில் மேற்கொள்ள முற்பட்டதானது, உலமாக்கள் நிறைந்திருந்திருக்கும் காத்தான்குடிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
தனது கருத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஓர் உலமா தாக்க முற்படுவது முஸ்லிம்கள் நிறைந்து வாழும் காத்தான்குடிக்கு ஆரோக்கியமாகாது என்பதையும் இந்நேரத்தில் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Leave a comment