ஏறாவூர்: நேற்று (02.03.2015) ஏறாவூர் சுகாதார வைத்திய அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது சுகாதாரத்திற்கு கேடான, சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அழுகிய பழைய மரக்கறிகள் (கத்தரிக்காய், கரட்), துர்நாற்றம் வீசக்கூடிய மீன்கள், பழைய பராட்டா ரொட்டிகள், பழைய கறிகள் என்பன கைப்பற்றப்பட்டது.
உணவக உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 04.03.2015 ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதி மன்றத்தில் இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது. மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம் பழீல் அவர்களின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஆர். இன்பராஜா, எஸ். சந்திரசிறி, யூ.எல்.எம் ஜின்னா, டீ.பகிதரன் ஆகியோர் இவ்வேலைத்திட்டத்தில் ஈடுபட்டனர்.
Published by

Leave a comment