Author: yourkattankudy.com
-
இலங்கை அணியில் 5 புதுமுக வீரர்கள்
கொழும்பு: பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியது. அதேபோல் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரை 3-1 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. 5-வது ஒருநள் கிரிக்கெட் 26-ம் திகதி நாளை இடம்பெறவுள்ளது.
-
“கொஞ்சம் அவசரப்பட்டதனால் அனைத்தையும் இழக்க நேரிட்டது”
ஹம்பாந்தோட்டை: அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் மணி, யானையின் வாலில் தொங்க விடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகலை மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
வெள்ளை வானில் ஐ.ம.சு.மு வேட்பாளரின் போஸ்டர்கள்
அநுராதபுரம்: இராணுவ இலக்கத் தகடு மற்றும் பிறிதொரு இலக்கத் தகடு பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கெப் வாகனத்தில் இருந்து அநுராதபுரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஒருவரின் 4500 போஸ்டர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இவர்களுக்கு வெட்கம் இல்லையா?
ஜானதிபதி தேர்தலின் போது மைத்திரியின் எதிரியாக செயல்பட்டு பல எதிர்ப்புகளை காட்டிய பிறகு மைத்திரியின் போட்டோவைப்போட்டு மற்றும் இந்த வாக்குகள் மைத்திரிக்கு போகும் வாக்குகள் என்று காட்டி வாக்கு கேட்பது எந்த வகையில் நியாயமாகும். வெட்கம் இல்லையா?
-
ரிசாத் நாளை அம்பாறை விஜயம் அ.இ.ம.கா வில் இணைய பலர் முஸ்தீபு
– ஏ.எச்.எம் பூமுதீன் அம்பாறை: பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டு தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார்.
-
தொலைபேசியில் மிரட்டியதாக அஸ்வர் புகார்
தங்கல்லை: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தனக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸில் புகார் செய்துள்ளார்.
-
எல்லா முகாம்களிலும் உள்ள முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் கவனத்திற்கு.!
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: தேசிய ஷூரா சபை, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில் உற்பட இலங்கையில் உள்ள பிரதான முஸ்லிம் சன்மார்க்க, சிவில் சமூக தலைமைகள், இஸ்லாமிய அமைப்புக்கள், இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் தீவிர அடிப்படிவாத மற்றும் பயங்கரவாத அமைப்புக்கள் எனவும், இலங்கையில்
-
இனவாதத்தை தோற்கடிகத்து மனித நேயம் வெற்றி கொள்ளப்படுவதற்கான பயணத்தில் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: வன்னி மாவட்டத்தில் இருந்து வந்த ஒரு வகையான அரசியல் கலாசாரத்தை மாற்றி சகல இனங்களும் அனைத்தையும் அனுபவிப்பதற்கான புதியதொரு அரசியல் கலாசாரத்துக்கான அடிக்கல்லினை நாட்டியுள்ளதாகவும்,அதனை முன்னெடுத்துச் செல்ல இருந்து வரும் இனவாதத்தை தோற்கடிகத்து மனித நேயம் வெற்றி கொள்ளப்படுவதற்கான பயணத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு
-
கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் தகவல் சேகரிப்பு – 2015
– முஹம்மத் அஜ்வாத் டோஹா: கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்று கூடல் கடந்த ஜூலை 10ம் திகதிவெள்ளிக்கிழமை கத்தார் டோஹாவிலுள்ள BCAS உயர் கல்வி நிலையத்தில்நடைபெற்றது. குறித்த ஒன்றுகூடல் மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாலும், எல்லோரையும் உள்ளடக்கியதாக நிகழ்வை ஏற்பாடு செய்ய போதிய இடவசதி அமையாத காரணத்தினாலும், அனைத்து கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களை இணைத்து கொள்ள முடியாமல் போனதையிட்டு வருத்தம் தெரிவிக்கின்றோம்.
-
சாதனையாளர் காத்தான்குடி றிஸ்விக்கு ஷிப்லி பாரூக் பாராட்டு
– சப்னி காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் வசிக்கும் 29 வயது நிரம்பிய இளம் சாதனையாளர் முஹம்மட் றிஸ்வி என்பவர் தனது பிரதேசத்தில் காணப்படும் கழிவுப்பொருட்களைப் உபயோகித்து துரித கதியில் இயங்கும் மா அரைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
-
ஐ.எஸ்: கொல்லப்பட்டவரின் குடும்பத்தை விசாரணை செய்ய பிரதமர் ரணில் ஆலோசனை
கொழும்பு: ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பில் இணைந்து போராடிய இலங்கையர் ஒருவர் மோதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு தரப்பிற்கு விசேட ஆலோசனை வழங்கியுள்ளார். அவரின் குடும்பத்தவர்களை அழைத்து விசாரணை செய்யவேண்டியுள்ளது.
-
“காத்தான்குடி, ஏறாவுர், கல்குடா வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும்”: ஷிப்லி
– சப்னி காத்தான்குடி: காத்தான்குடி, ஏறாவுர், கல்குடா தொகுதிகளில் காணப்படும் கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்திய சாலைகள் அதி நவீன வசதி வாய்ப்புடன் அபிவிருத்தி செய்யப்படும் என கிழக்கு மாகான சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 5ம் இலக்கத்தில் போட்டியிடும் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தெரிவித்தார்.