ஐ.எஸ்: கொல்லப்பட்டவரின் குடும்பத்தை விசாரணை செய்ய பிரதமர் ரணில் ஆலோசனை

ISIS-Sri-Lanka-[1]கொழும்பு: ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பில் இணைந்து போராடிய இலங்கையர் ஒருவர் மோதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு தரப்பிற்கு விசேட ஆலோசனை வழங்கியுள்ளார். அவரின் குடும்பத்தவர்களை அழைத்து விசாரணை செய்யவேண்டியுள்ளது.

மத்திய கிழக்கிற்கு தொழில் வாய்ப்பு பெற்று செல்வோரே இவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கும் இலங்கை பிரஜைக்கு மிடையிலான தொடர்பு குறித்து முழுமையான விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

ISIS-Sri-Lanka-[1]

தமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரஜைகள் ஆயுத குழுக்களுடன் இணைவது குறித்து அந்தந்த நாடுகளே எமக்கு அறிவிக்க வேண்டும். சிரியாவில் வேறு பெயரிலே இவர்கள் இயங்கி வருகின்றனர் என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதுவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. முப்படையினரும் தயார் நிலையிலே உள்ளனர். இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கும் இராணுவ தளபதிக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

Published by

Leave a comment