தங்கல்லை: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தனக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸில் புகார் செய்துள்ளார்.
தங்கல்லையிலுள்ள கால்டன் இல்லத்தில் வைத்து தனக்கு கையடக்க தொலைபேசி ஒன்றின் மூலம் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தன்னைக் கொன்று, எரிக்கவுள்ளதாக அச்சுறுத்தல் விடுக்கப்ட்டதாக அவர் தங்காலை பொலிஸில் முறைப்பாடொன்றை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்காலை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment