மன்னார்: வன்னி மாவட்டத்தில் இருந்து வந்த ஒரு வகையான அரசியல் கலாசாரத்தை மாற்றி சகல இனங்களும் அனைத்தையும் அனுபவிப்பதற்கான புதியதொரு அரசியல் கலாசாரத்துக்கான அடிக்கல்லினை நாட்டியுள்ளதாகவும்,அதனை முன்னெடுத்துச் செல்ல இருந்து வரும் இனவாதத்தை தோற்கடிகத்து மனித நேயம் வெற்றி கொள்ளப்படுவதற்கான பயணத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அழைப்புவிடுத்தார்.
மன்னார் உப்புக்குளத்தில் பிரதேச அரசியல் கிளை அலுவலகத்தினை மன்னார் நகரில் நேற்று இரவு (2015-07-23) திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் கூறியதாவது –
இந்த மாவட்டத்தில் மீ்ண்டும் சில சக்திகள் இனவாதம் என்னும் விஷத்தை விதை்து அதிலிருந்து நச்சுக்கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயல்கின்றனர்.கடந்த காலங்களில் இவர்கள் எதை செய்தார்களோ,அதனையோ இம்முறைத்த தேர்தலிலும் செய்வார்கள்.இதை தவிர வங்குரோத்து அரசியல் ஆசாமிகளுக்கு கூறுவதற்கு எதுவும் இல்லை.எமது அரசியல் பணி மக்களுக்கானது அதனால் தான் மக்கள் எம்முடன் இருக்கின்றார்கள்.இந்த பயணத்தில் இணைந்து கொள்ள இன்று தமிழ்,சிங்கள மக்கள் அணிதிரண்டு வருகின்றனர்.ஏனெனில் எமது கட்சியின் பெயர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பதால்,சில கட்சிகளின் பெயர்கள் இனவாதத்தை அடையாளப்படுத்தும் ஒன்றாக இருக்கின்றது.
வன்னி மாவட்டத்தில் தமிழ்ர்களும்,முஸ்லிம்களும் ஏன் ஒன்றித்து அரசியல் பயணத்தை செய்ய முடியாது என்று கேட்கின்றேன்.எமது மக்களுக்கிடையில் பிரிவினைவாதத்தை ஊட்டி,இனங்களுக்கு எதிரான வன்முறைகளையும்,கழுத்தறுபுக்களையும் செய்வதன் மூலம் சில அரசியல் வாதிகள் இது தான் எமது அரசியல் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கின்றனர்.அந்த கலாசாரத்தை நாம் மாற்றியுள்ளோம்.
இந்த தேர்தல் பட்டியிலில் ஜக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் நீங்கள் பாரக்கலாம்,தமிழ்களும்,முஸ்லிம்களும்,சிங்களவர்களும் போட்டியிடுகின்றனர்.முஸ்லிம்கள் தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும்,தமிழர்கள்,சிங்களவர்ளுக்கும்,முஸ்லிம்களுக்கும்,சிங்களவர்கள் தமிழ்ளுக்கும் ,முஸ்லிம்களுக்கும் வாக்களிக்கும் இன ஒற்றுமைக்கான ஒற்றுமையினை உருவாக்கிய கட்சியாக எமது அகில இலங்கை மக்கள் மட்டுமே இருக்கின்றது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது கூறினார்.
இந்த நிகழ்வில் வேட்பாளர்களான ராஜன் மார்க்,எம்.கபூர்,தேசமான்ய எஹியான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Published by


Leave a comment