எல்லா முகாம்களிலும் உள்ள முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் கவனத்திற்கு.!

muslim politicians– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

கொழும்பு: தேசிய ஷூரா சபை, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில் உற்பட இலங்கையில் உள்ள பிரதான முஸ்லிம் சன்மார்க்க, சிவில் சமூக தலைமைகள், இஸ்லாமிய அமைப்புக்கள், இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் தீவிர அடிப்படிவாத மற்றும் பயங்கரவாத அமைப்புக்கள் எனவும், இலங்கையில்

ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் இருப்பதாகவும் பொது பல சேனாவின் அரசியல் அணியான நாகப்பாம்பு சின்ன பொதுஜன பெரமுன கட்சியினர் ஊடகங்களில் அப்பட்டமாக அவதூறு தெரிவித்துள்ளனர்.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் குறித்த மிகவும் பாரதூரமான அவதூறுகளை, காழ்ப்புணர்வு பரப்புரைகளை இனவெறி மதவெறி சக்திகள் அரசியல் சாயம் பூசி செய்கின்ற பொழுது, பிரதமருடைய அணியிலும், ஜனாதிபதியுடைய அணியிலும், அவர்கள் இருவருடையவும் நல்லாட்சி அணியிலும், முன்னால் ஜனாதிபதி மஹிந்த அணியிலும் இருக்கின்ற சோனகக் கட்சியினர் எத்தகைய நகர்வுகளை நடவடிக்கைகளை எடுத்தார்கள் ? என ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஐ எஸ் ஐ எஸ், அல்-காயிதா, போகோ ஹராம், தலிபான், லஷ்கர் தைபா போன்ற அமைப்புக்களுடன் இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பு இருப்பதாக பெரும்பான்மை சமூகங்களின் மத்தியில் “இஸ்லாமோ போபியா” எனும் பீதியை ஏற்படுத்தும் கைங்கரியத்தை தீய சக்திகள் மேற்கொள்கின்றமை இந்த நாட்டின் தேசிய ஐக்கியத்திற்கும், சமாதான சகவழ்விற்கும், ஸ்திரத் தன்மைக்கும், விடுக்கப்படும் மிகவும் பாராதூரமான அச்சுறுத்தலாகும்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், சுயாதிபத்தியத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கின்ற உள்நாட்டு மற்றும் நாட்டு சக்திகள், தனி நபர்கள் குறித்து இலங்கை அரசும், பாதுகாப்புத் தரப்பினரும், சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துகின்ற நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், வேறு ஏதேனும் இனவாத மதவாத சக்திகள் சட்டத்தை கையிலெடுப்பதனையும், குறிப்பிட்டவொரு சமூகத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதனையும், போலிப் பரப்புரைகள் செய்வதனையும் அனுமதிக்கக் கூடாது.

வரலாறு நெடுகிலும் இந்த நாட்டின் அமைதி சமாதானம், ஒருமைப்பாடு, பாதுக்காப்பு சுயாதிபத்தியம், ஸ்திரத் ஸ்திரத் தன்மை, அபிவிருத்தி என்பவற்றிற்கு ஏனைய சமூகங்களைவிட எவ்விதத்திலும் குறைவில்லாது பங்களிப்புச் செய்துவரும் இலங்கை முஸ்லிம் சமூகம் அவற்றிற்காக பெரும் விலையையும் கொடுத்திருக்கின்றது, எந்தவொரு கட்டத்திலும் வன்முறைகளையோ அல்லது பிறநாட்டு சக்திகளின் தலையீடுகளையோ நாடியதுமில்லை.

இலங்கை முஸ்லிம்களுக்கு சுதேச சன்மார்க்க, சிவில் மற்றும் அரசியல் தலைமைகளும் மிகச் சிறந்த தலைமைத்துவ மற்றும் ஜனநாயக கட்டமைப்புக்களும் இருக்கின்ற நிலையில், பிர நாட்டு சக்திகளால் வழி நடத்தப்பட வேண்டிய தேவையும் அவசியமும் கிடையாது.

அதேவேளை முஸ்லிம் உலகில் இடம் பெறுகின்ற அனைத்து இராணுவ நடவடிக்கைகள், போராட்டங்கள் அல்லது முஸ்லிம் உலகை இலக்கு வைத்து சர்வதேச சதிகார சகதிகளால் முஸ்லிம் தேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற நகர்வுகள் குறித்து நிலைப்பாடுகளையும், தீர்ப்புக்களையும் எடுத்துக் கூறி இந்த நாட்டில் உள்ள தீய சக்திகளை த்ரயுப்திப் படுத்த வேண்டிய தேவையும் இலங்கை முஸ்லிம்களாகிய எமக்கு கிடையாது.

“போருக்குதவாத வாள் பலாக்காய் வெட்டவா” என ஒரு சிங்கள முது மொழி இருக்கின்றது, கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட அத்தனை சவால்களுக்கும் பின்னால் இந்த கையாளாகா அரசியல் தலைமைத்துவங்கள் இருந்திருக்கின்றன.

உடனடியாக இன்றே உங்கள் சாணக்கியங்களை சமயோசிதங்களை, ஆத்திர அவசரமற்ற ஆவேசங்கள் அற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவும், பிரதமர், ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க விட்டால் நீங்கள் எல்லோரும் அரசியாலா அல்லது வேறுதுமா செய்கின்றீர்கள் என்று முஸ்லிம் சமூக இளைஞர்கள் வாக்கு வேட்டைகளின் பொழுது உங்களிடம் கேட்பார்கள்.

முக்கிய குறிப்பு:

“உரிய நடவடிக்கைகளை, உரிய தரப்புக்களூடாக மேற்கொள்வதனை விடுத்து தேர்தல் மேடைகளிலும், ஊடக மாநாடுகளிலும் வீரப்புக்கள் பேசி எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்க்கின்ற கைங்கரியத்தை நீங்கள் செய்யக் கூடாது என்றும் முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது.”

ஜனநாயக வழிமுறைகளில் மாத்திரமே தமது இருப்பு பாதுக்காப்பு மற்றும் உரிமைகள் குறித்த அபிலாஷைகளை முஸ்லிம் சமூகம் அடைந்து கொள்ள தேசிய அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுக்கின்றது.

இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் கொள்கை பிரகடனங்களில் உழவன்கப்படவேண்டிய சமூகம் மற்றும் தேசம் சார்ந்த எதிர்பார்ப்புக்களை தேசிய ஷூரா சபை சகல அரசியல் கட்சிகளுக்கும் ஆவணமாக சமர்ப்பித்துள்ளது, முஸ்லிம் அரசியல் தலைமைகள் அதனை தாம் சார்ந்த தேசிய அரசியல் அணிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு உறுதி மொழிகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பின் முஸ்லிம் வாக்காளர்களுக்கு செய்யும் உபகாரமாக இருக்கும்.

அதேபோன்று, முஸ்லிம் சமூகம் சார்பாக தேசிய அரசியல் கட்சிகளுடன் முஸ்லிம் அரசியல் குழுக்கள் செய்துகொண்டுள்ள உடன்பாடுகள், அவற்றின் தேர்தல் விgnஞாபனங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மூஸ்லீம் சமூகத்தின் முன் மிகத் தெளிவாக அவர்கள் முன் வைக்க வேண்டும்.

Published by

Leave a comment