Author: yourkattankudy.com
-
மட்டக்களப்பில் யானைக்கோ, வெற்றிலைக்கோ தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடாது! ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம்
– புவி. எம்.ஐ. ரஹ்மதுழ்ழாஹ் மட்டக்களப்பு: ‘கிழக்கில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் வியூகமும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும்’ எனும் தலைப்பில் அவர் எழுதியுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசியல் களம் தொடர்பான ஆய்வுக்கட்டுரை எமது இணையதள வாசகர்களின் வாசிப்புக்கும், யோசிப்புக்குமாக இங்கே மீள்பிரசுரமாகின்றது.
-
ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தீர்வு: ஐதேமு தேர்தல் அறிக்கை
கொழும்பு: இலங்கையின் சகலதரப்பின் இணக்கத்திற்கு அமைய ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமே இனப்பிரசனைக்கான தீர்வு மேற்கொள்ளப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
‘பிரரை தோற்கடிக்கும் ஹக்கீமின் முயற்சியினை வன்மையாக கண்டிக்கிறேன்’: ஹிஸ்புல்லாஹ் (காணொளி)
அஹமட் இர்ஸாட்:- மாவட்டத்தில் இருவருடைய அரசியல் சூனியமாக்கப்பட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அன்மையில் ஏறாவூரில் கலந்து கொண்ட கலந்துரையாடலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் மறைமுகமாக உங்களினதும் அமீர் அலியினதும் அரசியல் எதிர்காலத்தினை சுட்டிக்காட்டியமையினை நீங்கள் எவ்வாறு கருதுகின்றிர்கள்?
-
காத்தான்குடி போக்குவரத்துப் பொலீசாரின் பிழையான பார்வையும், அநியாய அபாரதமும்!
– புவி எம் ஐ ரஹ்மதுல்லாஹ் காத்தான்குடி: இன்று 23.07.2015 வியாழக்கிழமை காலை 11.45 மணிக்கு புதிய காத்தான்குடியிலுள்ள எனது வீட்டிலிருந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராகக் கல்வி பயிலும் எனது மகளுக்கான பகலுணவை எடுத்துக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி எனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்.
-
காத்தான்குடியில் இடம்பெறவிருந்த ஐ.தே.க.வின் புதிய மத்திய குழுக்கூட்டத்திற்கு மாவட்ட பிரதம அமைப்பாளர் அ. சசிதரன் தடை!
– புவி எம் ஐ ரஹ்மதுல்லாஹ் காத்தான்குடி: காத்தான்குடியில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐ.தே.கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு, மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.கட்சியின் பிரதம அமைப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அரசரத்தினம் சசிதரன் தடைவிதித்துள்ளதாக காத்தான்குடி ஐ.தே.கட்சியின் மத்திய குழுச் செயலாளர் ஏ.எல்.ஏ. கையூம் ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
-
ரிஸ்வி ஜவகர்சாவின் பெயர் திடீரென நீக்கப்பட்டமை ஏன்?
– முகம்மட் இசாக் -குருநாகல் குருநாகல்: சவுதி மன்னரால் இலங்கை ஏழைகளுக்காக வழங்கப்பட்ட இலவச வீசாவில் உம்ரா சென்றதே ரிஸ்வி ஜவகர்சாவின் பெயர் வேட்பு மனுவிலிருந்து நீக்கப்பட்டதற்கான உண்மைக் காரணம் என நம்பகரமாக தெரியவருகின்றது.
-
2016ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாற்றங்கள்
– நமது நிருபர் கொழும்பு: கல்வி அமைச்சு 2016ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாற்றங்களுக்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது. அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் ஆசிரியர் இடமாற்றங்களுக்கான மாதிரி விண்ணப்பப் படிவங்களும் அதிபர்களுக்கான அறிவுறுத்தல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
இலங்கையில் முதன் முறையாக பேரூந்தினுள் ஊடகவியலாளர் மாநாடு
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: இலங்கையில் முதன் முறையாக பேரூந்தினுள் ஊடகவியலாளர் மாநாடொன்று நடாத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அஜித் பீ பெரேராவினானேலேயே இம் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
-
செப்டம்பரில் இருந்து அரச ஊழியர்களுக்கான ரூ 10,000/- கொடுப்பனவு
கொழும்பு: அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவாக வழங்கப்படுகின்ற பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து அடிப்படை சம்பளத்தில் சேர்க்கவுள்ளதாகவும் அதன் பயன் ஓய்வூதியம் பெறுகின்ற போதும் கிடைக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்மீமன தலகஹவில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
-
நபி (ஸல்) அவர்களது காலத்திலேயே எழுதப்பட்ட அல்குர்ஆன் பிரதி இங்கிலாந்தில் கண்டெடுப்பு
லண்டன்: புனித மறையான அல் குர்ஆனின் ஆகப் பழைய எழுத்துப் பிரதியின் சில பக்கங்கள் தமது ஆவணத் தொகுப்பில் இருந்தது தெரியவந்திருப்பதாக பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஒன்றின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
-
மஹிந்த பதவி வெறி பிடித்தவர்
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிவெறி பிடித்தவர் என்று நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.முன்னர் இருந்த ஜனாதிபதிகளைப் போல இவரும் கண்ணியமாக அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
-
அமீர்அலியின் மட்டக்களப்புப் பிரகடனமும் சூரிய உதயத்துக்காக காத்திருக்கும் நாவலடி மக்களும்
மட்டக்களப்பு: நேற்று முன்தினம் 21.07.2015 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகரில் பஸ் நிலைய சதுக்கத்தில் ஐ.தே.கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அமர்க்களமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐ.தே.கட்சியின் சார்பில் இம்மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர் அலி அவர்கள் உரையாற்றுகையில்,