இலங்கை அணியில் 5 புதுமுக வீரர்கள்

SRI LANKA CRICKET LOGO[1]கொழும்பு: பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியது. அதேபோல் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரை 3-1 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. 5-வது ஒருநள் கிரிக்கெட் 26-ம் திகதி நாளை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட 20க்கு20 தொடர் 30-ம் திகதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் விவரம்:-

மலிங்க (தலைவர்), தில்ஷான் குஷால்பெரேரா, கித்ருவன் விதனக, தனஞ்ஜய டி சில்வா, மெத்யுஸ், தசுன் ஜானக, சாமர கபுகெதர, ஜகன் ஜயசுர்ய, திசர பெரேரா, ஜப்ரே வந்தேர்சாய், நுவான் குலசேகர, பினுர பெர்னாண்டோ, சுதுரங்க டி சில்வா, மலிந்த சிறிசர்தேனே.

இதில் பினுர பெர்னாண்டோ (வேகப்பந்து வீச்சாளர்), தசுன் ஜானக (சகலதுறை), ஜப்ரே வந்தேர்சாய் (சுழற்பந்து), ஜகன் ஜயசுர்ய மற்றும் தனஞ்ஜய டி சில்வா (துடுப்பாட்டவீரர்) ஆகியோர் புதுமுக வீரர்கள் ஆவார்கள்.

முதல் 20க்கு20 போட்டி ஜூலை 30-ம் திகதியும், 2-வது 20க்கு20 போட்டி ஆகஸ்ட் 1-ம் திகதியும் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment