ஜானதிபதி தேர்தலின் போது மைத்திரியின் எதிரியாக செயல்பட்டு பல எதிர்ப்புகளை காட்டிய பிறகு மைத்திரியின் போட்டோவைப்போட்டு மற்றும் இந்த வாக்குகள் மைத்திரிக்கு போகும் வாக்குகள் என்று காட்டி வாக்கு கேட்பது எந்த வகையில் நியாயமாகும். வெட்கம் இல்லையா?
வடக்கு கிழக்கில் வெற்றிலைச்சின்னத்தில் வாக்கு கேட்கும் அனைத்து வேட்பாளர்களும் மைத்திரிபாலவின் எதிரிகள் தான்.
இவர்கள் அனைவரும் நல்லாட்சியை விரும்பாதவர்கள், மைத்திரி என்று சொல்லுவார்கள் உண்மை இதுவல்ல. அனைத்தும் போலியான வார்த்தைகள். மகிந்தவை சிம்மாசனத்தில் வேண்டும் என்கிற நோக்கில் தான் இப்படியாக கேவலமான வேசம் போடுகின்றார்கள்.
வடகிழக்கில் எந்த ஒரு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளராக இது வரை ஜனாதிபதி அவர்களால் யாரும் நியமிக்கப்படவில்லை. அப்படி இவ்வேட்பாளரில் ஒருத்தரை நியமித்தால் அவர்தான் உண்மையான மைத்திரியின் ஆள்! இது தான் உண்மை!
போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்.
மக்களே! சிந்தித்து தீர்மானம் எடுங்கள்.
MIM Zarook JP
SLMC அமைப்பாளர்
காங்கேயனோடை
Leave a comment