கொழும்பு: கடந்த வெள்ளிக்கிழமை (20) வாசிக்கப்பட்ட வரவு செலவு திட்ட பிரேரணைகளை உள்ளடக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரவு செலவு பிரதிகள் தொடர்பில் பாராளுமன்றில் குழப்பகரமான நிலைய உருவாகியது. ஆரம்பத்தில் வழங்கப்பட்ட பிரதிகளுக்கு பதிலாக மற்றுமொரு பிரதி வழங்கியதாக தெரிவித்த எதிர்க்கட்சியினர், வரவு செலவு திட்டத்தில் எத்தனை உரைகள் சமர்ப்பிக்கப்பட்டன, ஏன் இவ்வாறான மாற்றம் என கூச்சலிட்டனர்.
இதன்போது, பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகள் கூடியபோது, இது குறித்து விளக்கமளிக்குமாறு ரவி கருணாநாயக்கவிடம், சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
இதன்போது ரவி கருணாநாயக்க,
“ஒரு வரவு செலவுத்திட்ட உரையே வாசிக்கப்பட்டது. அனைத்து விடயங்களும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் 5 பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், சிங்கள மொழியில் 5 பகுதிகள் உள்ளடக்கப்படவில்லை. இன்று (23) அது சீர் செய்யப்பட்டு, மீண்டும் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
இதன்போது தெரிவித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க,
“குறித்த பிரதியில் எவ்வித புதிய விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை, சிங்கள பிரதியில் மாத்திரமே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.மூன்று பக்கங்கள் இணைக்கப்பட்டிருக்கவில்லை. அங்க சம்பூரணமான முழு பிரதியையும் முன்வைக்கவே அவற்றை மீண்டும் வழங்கப்பட்டது” என தெரிவித்ததோடு, இது குறித்து வருந்துவதாக தெரிவித்தார்.

Leave a comment