காத்தான்குடி: எமது சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA-ஒஸா) பல்வேறுபட்ட சமூக துயர் துடைப்பு பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. எமது அமைப்பினது ஐந்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, காத்தான்குடி இளங் கவிஞர்களை ஊக்குவிக்குமுகமாக கவிதைப் போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளது. கடந்த 5 வருடங்களுக்குள் எமது இலக்கியம் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் விரல் விட்டு எண்ணும் விலாசங்களே மின்னுகின்றன.
இது எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது .இதனால் ‘குறுனிக்கற்களும் குகைகளைக்கட்டாதா’ ? என்ற அனுமாப்பில் இப்போட்டியினை நடாத்த தீர்மானித்தோம். இது இளங் கவிஞர்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.எனவே இளம் கவிஞர்கள் இவ்வாய்ப்பை தவறவிடாது குறித்த நிபந்தனைகளின் அடிப்படையில் கவிதைகளை தாமதியாது எமக்கு அனுப்பி வையுங்கள்.
மூத்த இலக்கிய நடுவர்களால் தெரிவு செய்யபடும் முதல் மூன்று கவிதைகளுக்கும் பரிசில்கள் வழங்கப்படும். தொடர்ந்து தெரிவு செய்யப்படும் 10 கவிதைகளுக்கு சான்றிதல்கள் வழங்கி கௌரவிக்கப்படும் .இக் கௌரவிப்பு நிகழ்வ்வு எமது அமைப்பினது விழாவொன்றில் நடைபெறும் என்பதனையும் மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
- நிபந்தனைகள்
இளங் கவிஞர்கள் மாத்திரமே பங்கு பற்ற முடியும்.
காத்தான்குடியையும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களையும் சேர்ந்தவர்களே போட்டியில் இணையலாம்.
வயதெல்லை கிடையாது.
நாம் கீழ்குறிப்பிடும் மூன்று தலைப்புகளுக்குள் மாத்திரமே கவிதைகள் எழுதப்படல் வேண்டும்.
புதுக்கவிதையாகவோ மரபுக்கவிதைகளாகவோ இருக்கலாம்.
எதுவானாலும் 48 வரிகளுக்குள் உள்ளடக்கப்படல் வேண்டும்.
தங்களது பெயர் முகவரிகள் தொடர்புகள் பற்றிய விபரங்கள் பிறிதொரு கடதாசியில் எழுதப்படல் வேண்டும்.
கவிதை ,கணணி தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும் கைஎழுத்தில் அனுப்பப்படும் சவிதைகள் நிராகரிக்கபடும்.
தபால் ,ஈமெயில் (மின் அஞ்சல்) ஊடாக அனுப்பலாம்
முடிவுத்திகதி 13.12.2015 காலை 10.00 மனிக்கு முன்னர் எமக்கு கிடைக்கப் பெறல் வேண்டும்
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
- தலைப்புகள்:
– ஓயாது உழைக்கும் ஒஸா
– உதவியே உந்தன் உயிர்
– சமூதாயத்தை நேசிக்கும் சத்திய இயக்கம்
- அனுப்பவேண்டிய முகவரிகள்:
Ilmi ahamed lebbe (President- OSA)
34/2 Weaving center road, New kattankudy.03
milmeahamedlebbe@gmail.com

Leave a comment