காத்தான்குடி: காத்தான்குடி -03 பொதுமைதான வீதியில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுல் சுஹதா பள்ளிவாயல் கடந்த 25 வருடகாலமாக மிகவும் பழமையான கட்டிடத்தில் அமையப் பெற்று அண்மையில் பள்ளிவாயலைச் சூழவுள்ள ஜமாஆத்தர்களினாலும் இவ்வூரின் தனவந்தர்களினாலும் அழகுற நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாயலின் நிர்மாணப் பணிகள் ஒரளவு நிறைவு பெற்றாலும் மலசல கூட வசதி இன்னும் புதிதாக அமையப்பெறவில்லை.
இந்த வகையில் இதனை புதிதாக வுழுஹ் செய்யும் தொகுதியுடன் இணைத்து நிர்மாணிக்கின்ற பணியில் பள்ளிவாயல் நிர்வாகமும் ஜமாத்தர்களும் இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதன் முதற்கட்டமாக தனவந்தர்களின் உதவியுடன் அத்திவாரம் இடப்பட்டு தூன்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த மலசல கூட தொகுதியினை நிர்மாணிப்பதற்கு பின்வரும் கட்டங்களில் சில சகோதரர்கள் முழுமையாக பொறுப்படுத்துள்ளனர்.
மாபிள் பதித்து தருவதற்கு ஒரு சகோதரரும், மின் இணைப்பை செய்வதற்கு ஒரு சகோதரரும், சட்டரிங் செய்வதற்கு ஒரு சகோதரரும் முன்வந்துள்ளதால் ஏனைய தேவைகளாக இதனை நிர்மாணித்து முடிப்பதற்கு பின்வரும் உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே அல்லாஹ்வின் இல்லமான இந்த மஸ்ஜிதின் உடனடித் தேயையான இந்த மலசல கூட, மற்றும் வுழுஹ் செய்யும் தொகுதியினை நிர்மாணிப்பதற்கு தயாள குணம் உள்ள சகோதரர்கள் தங்கள் உதவியினை பொருளாகவோ பணமாகவோ தந்துதவுமாறு இப்பள்ளி வாயல் நிர்வாகம் அன்புடன் வேண்டுகின்றது.
சீமென்ட் – 180 Bags
12mm/10mm கம்பி – 200 பார்
மேசன் கூலி – 180,0000/-
¾ கல் – 02 டிப்பிங்
இவ்வண்ணம்,
ILM. இப்றா லெப்பை
உப தலைவர்
077 60 84 109


Leave a comment