Author: yourkattankudy.com
-
பாகிஸ்தான் பெண் பொலிஸ்!
பாகிஸ்தான் தலைநகர் லாஹூருக்கு அருகாமையில் உள்ள வகா ரயில் நிலையத்தில், இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாகிஸ்தான் பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர். அங்கு மூன்று தினங்கள் இடம்பெறும் சங்கனா ஷாஹிப் சீக்கிய மத அனுஷ்டானங்களில் இவர்கள் கலந்துகொள்வதற்காக வருகின்றனர். வகா ரயில் நிலையத்தில் பாதுகாப்புக் கடமையிலீடுபடும் பாகிஸ்தான் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை படத்தில் காணலாம்.(MJ)
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை தொடர்பான சுகாதார பிரதியமைச்சருடன் காத்தான்குடி மீடியா போரத்தின் மற்றுமொரு சந்திப்பு
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பாக காத்தான்குடி மீடியா போரம் பல முன்னெடுப்புக்களைச் செய்து வருவதுடன் முக்கிய நிறுவனங்கள் சமூக அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும் வருகின்றது. இந்தவகையில் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் உடனான சந்திப்பு இன்று காத்தான்குடியில் மீடியா போரத்தின் தலைவர் ஏ எல் டீன் பைறூஸ் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
-
ஒஸ்மானியா கல்லூரியில் சமந்தா
யாழ்ப்பாணம்: இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், இன்று யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு பிரதம அதிதிகளாக சமந்தா பவர் மற்றும் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தனர்.
-
(இதுமாதிரி 100 தடவ சொல்லிட்டாங்க) ஐ எஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டு, நிலப்பரப்பு மீட்கப்படும்:ஒபாமா
வோஷிங்டன்: இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குழுவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் எவ்வித சுணக்கமும் காட்டமாட்டார்கள் என அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.ஐ எஸ் அமைப்புக்கு எதிரான கூட்டணி, அவர்களை அழித்து அவர்கள் வசமுள்ள நிலப்பரபபையும் மீட்க உறுதிபூண்டுள்ளது என கோலாலம்பூரில் பேசிய ஒபாமா சூளுரைத்தார்.
-
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்
கொழும்பு: கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைந்த தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.பாராளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும் மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பரிந்துரையின்பேரில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் முஸ்லிம்களின் கருத்துக்களும்
லண்டன்: இஸ்லாமிய அரசு அமைப்பை உலகில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் எதிர்மறையாகவே பார்க்கின்றன என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ஒரே ஒரு நாடுதான் விதிவிலக்கு.இஸ்லாமிய அரசு என்ற அமைப்பை, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் வசிக்கும் மக்கள் பொதுவாக எதிர்மறையாகவே பார்க்கிறார்கள் என்று சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
-
அரசாங்கம் கவிழப்போகுது…?
கொழும்பு: ஆளும் அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக இரண்டு அணிகள் தனித்தனியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் விருப்பத்தை பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு அமைச்சர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் தலைவர் ஒருவர் இதில் ஒரு பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கி வருகிறார்.
-
தூங்கும் வனம்
பச்சை கட்சியின் பட்ஜெட் வாசிப்பில் மிச்சம் உறுப்பினர் அச்சா படுத்தனர். நாட்டில உள்ள நாட்டாம கூட மூட்ட சுமக்காது
-
காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா, சம்மேளனம் ஆகியவற்றின் கவனத்திற்கு
பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி. ஜம் இய்யதுல் உலமா, காத்தான்குடி. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மேற்படி நான் காத்தான்குடியின் பிரதான நிறுவனமான உங்களிடம் சில விடயங்களை எழுத்து மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்.
-
பலஸ்தீன் அகதிக்கு தலையை வெட்டிக் கொல்ல சவுதி நீதிமன்றம் உத்தரவு
றியாத்: இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி, ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத், தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார்.
-
ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஹாரூன் ஸஹ்வியின் புதிய ஜும்மா பள்ளிவாயல்! (காணொளி)
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஓட்டமாவடி: பலமாதங்களாக கல்குடா ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகின்ற கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் ஸஹ்வியினால் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய ஜும்மா பள்ளிவாயலானது ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயல் இருக்கின்ற பிரதேசத்திற்குள் ஜும்மா தொழுகையினை நடாத்துவதினை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எம்.யூ.எம். இஸ்மாயில் அதிபர் 20.11.2015 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் ஓட்டமாவடி ஜமாத்தாரிடம் பகிரங்கமாக வேண்டிக்கொண்டார்.