Author: yourkattankudy.com
-
சிங்க லே ஸ்டிக்கரை கழற்றி எறியும் சாரதி
கொழும்பு: தனது வாகனத்தில் ஒட்டப்பட்ட சிங்க லே (சிங்க இரத்தம்) என பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை சிங்கள சாரதி ஒருவர் கழற்றி எறிவதை காணக் கூடிதாக உள்ளது. இந்த ஸ்டிக்கரை வாகனத்தில் ஒட்டியமையால் இரு வாரங்களாக தனக்கு எவ்வித ஓட்டங்களும் ( hire) கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
-
துப்பாக்கி ஏந்திய கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஒருவர் பலி!
காபூல்: ஆப்கானிஸ்தான் தேசியக் கிரிக்கெட் அணி சிம்பாப்வேக்கு எதிராக பெற்ற ஒரு நாள் போட்டித் தொடர் வெற்றியைக் கொண்டாடிய சிலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பதின்பருவ இளைஞர் கொல்லப்பட்டார்.ஆப்கானிஸ்தானின் தெற்கே நடந்த இந்த சம்பவத்தைத் தவிர, தலைநகர் காபூலில் நடந்த வேறொரு சம்பவத்தில் வேறு பலர் காயமடைந்தனர்.
-
ஓட்டமாவடியில் ஷீஆ கொள்கைக்கு எதிராக பொது மக்களுக்கு விழிப்புட்டும் இஸ்லாமிய சன்மார்க்க மாநாடு
எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: தூய இஸ்லாமிய மார்க்கத்தினையும்,ஸஹாபாக்களையும்,நபி முஹம்மத் (ஸல்) அவர்களினது மனைவி மார்களையும் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளையும் விமர்சிக்கும் ஷீஆக்களின் வழிகெட்ட கொள்கைக்கு எதிரான மாநாடு வெள்ளிக்கிழமை 08.01.2016 இடம் பெறவுள்ளதாக மீராவோடை ஜூம்ஆப்பள்ளி வாயல் நிறுவாகத்தினர் தெரிவித்தனர்.
-
முகா எம்பி ஹபீஸ் அ.இ.ம.காவுடன் இணைவு?
கொழும்பு: முகா தேசியப்பட்டியல் எம்பியும் ஹக்கீமின் சகோதரருமான டொக்டர் ஹபீஸ் அ.இ.ம.கா வில் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. ஹபீஸ் எம்பிக்கும் அ.இ.ம.கா சிரேஸ்ட தலைமைத்துவ சபைக்குமிடையில் குறித்த இணைவு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.ஹபீஸூக்கும் அ.இ.ம.கா சிரேஸ்ட தலைமைகளுக்குமான முதற்தடவையான சந்திப்பு வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பாராளுமன்ற சிற்றுண்டி அறையில் இடம்பெற்றுள்ளது.
-
இலங்கை 3 ஓட்டங்களால் தோல்வி
மோன்கணி: இன்று (07) இடம்பெற்ற நியூஸிலாந்து கிரிக்கெட் அணியுடனான இருபதுக்கு இருபது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி நியூஸிலாந்தை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன்படி, துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 182 ஓட்டங்களை பெற்றது.
-
“ஹலோ ஜனாதிபதி”: உங்கள் பிரச்சனைகளை ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்
அகமட் இர்ஷாட் கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகி ஓராண்டு நிறைவு பெறும் நாளை எட்டாம் திகதி “மக்கள் பிரச்சனைகளை ஜானதிபதிக்கு சொல்லுங்கள்” என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுமென ஊடக பாராளுமன்ற சீர்திருத்த அமைச்சர் கயந்த கருனாதிலக்க நேற்று ஊடக அமைச்சில் நேற்று 06.01.2016 தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பொது மக்கள் எந்தவொரு தொலை பேசி சேவை மூலமும் அல்லது இன்ரநெட் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
-
ஜனாஸா அறிவித்தல்
டோஹா: புதிய காத்தான்குடி-06, அல்-அமீன் வீதியைச் சேர்ந்த RM.பாஸில் (25), இன்று (07/01/2016) அதிகாலை 3.45 அளவில் கத்தார் நாட்டில் உள்ள அல் றுமைலா வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை!
மட்டக்ளகளப்பு: இன்று காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையான 3 மணிநேரத்தில் 24.8 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகரி கே. மூரியகுமார் தெரிவித்ததர். தொடராக பெய்துவரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி, வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க மஹிந்தவே காரணம்
கொழும்பு: நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே குற்றஞ்சாட்டினார். நாட்டின் பொருளாதாரத்தின் போக்குக் காரணமாக குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டமையால் பல குடும்பங்கள் சீரழிந்திருப்பதாகவும், இதனால் பலர் விவாகரத்துக் கோரி நீதிமன்றம் சென்றிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
-
கல்முனை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களை வாழ்த்துகின்றேன் – பிரதியமைச்சர் ஹரீஸ்
ஹாசிப் யாஸீன் கல்முனை: க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையும் வெவ்வேறு துறைகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
துருக்கிய கடற்கரையில் 34 அகதிகளின் சடலங்கள்!
அங்காரா: துருக்கியின் ஏகியேன் கடற்கரையில் குறைந்தது 34 குடியேறிகளின் உடல்கள் கரையொதிங்கியுள்ளதாக துருக்கிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இவர்களில் பல சிறார்களும் அடங்குவர் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர்.இந்தக் குடியேறிகள் இரண்டு தனித்தனி படகுகளில் கிரேக்கத் தீவான லெஸ்போஸை அடைய முயற்சித்த போது, மோசமான வானிலை காரணமாக அந்தப் படகுகள் கவிழ்ந்தன என துருக்கிய ஊடகங்கள் கூறுகின்றன.
-
தாஜுதீன் கொலை: CCTV காட்சிகள் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளுக்கு
கொழும்பு: ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான CCTV காட்சிகளை அமெரிக்காவின் FBI, சீனாவின் MPS இற்கு அல்லது இங்கிலாந்தின் ஸ்கொட்லாண்ட் யார்ட் (Scotland Yard) நீதிமன்ற ஆராய்ச்சி சம்பந்தமான ஆய்வுகூடத்திற்கு அனுப்புவது சிறந்தது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.