ஓட்டமாவடியில் ஷீஆ கொள்கைக்கு எதிராக பொது மக்களுக்கு விழிப்புட்டும் இஸ்லாமிய சன்மார்க்க மாநாடு

  • எம்.ரீ.எம். பாரிஸ்

oddamavadiஓட்டமாவடி: தூய இஸ்லாமிய மார்க்கத்தினையும்,ஸஹாபாக்களையும்,நபி முஹம்மத் (ஸல்) அவர்களினது மனைவி மார்களையும் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளையும் விமர்சிக்கும் ஷீஆக்களின் வழிகெட்ட கொள்கைக்கு எதிரான மாநாடு  வெள்ளிக்கிழமை 08.01.2016 இடம் பெறவுள்ளதாக மீராவோடை ஜூம்ஆப்பள்ளி வாயல் நிறுவாகத்தினர் தெரிவித்தனர்.

இஷாத்தொழுகையை தொடர்ந்து மட்டக்களப்பு ஓட்டமாவடி மீராவோடை மீரா ஜூம்ஆப்பள்ளி வாயளில் இடம் பெறவுள்ள வழிகெட்ட ஷீஆ இயக்கம் தொடர்பில் இஸ்லாமிய கோட்பாடுகள் பற்றியும் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமயத்தவர்கள் மத்தியிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கும் மார்க்கம் என்றவகையில் அதன் அமைதியை சீர்குழைக்க ஷீஆக்களினால் முன்னொடுக்கப்படும் இஸ்லாம் பற்றி பிழையாக விளக்கங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இச் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

எனவே இம் மாநாட்டில் அனைத்து இஸ்லாமிய சகோதர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் நிறுவாகம் அழைப்பு விடுத்துள்ளது.

oddamavadi

Published by

Leave a comment