Author: yourkattankudy.com
-
ஒரே இன்னிங்ஸில் 1000 ஓட்டங்கள் எடுத்த மும்பை பள்ளி மாணவன்
மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் பள்ளி மாணவன் ஒருவன் ஒரே இன்னிங்ஸில் ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து உலக அளவில் பள்ளிக் கிரிக்கெட் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறான்.மும்பையில் நடத்தப்படும் எச்.டி.பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் , 15 வயதான ப்ரனவ் தனவதே ஆயிரம் ஓட்டங்களை எடுத்தான்.
-
உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பாக முஸ்லிம்களின் பிரேரணைகளைத் தெரிவிக்கும்படி ஆய்வுக்கும் புள்ளிவிபரங்களுக்குமான நிலையம் வேண்டுகோள்
ஏ.கே.எம். சியாத் கொழும்பு: ஆய்வு மற்றும் புள்ளிவிபரங்களுக்கான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் உள்ள10ராட்சி மன்றங்களுக்கான புதிய எல்லை நிர்ணய பிரேரணைகளின் பிரகாரம்; 70% சத வீதமானவர்கள் வட்டாரங்கள் மற்றும் பல அங்கத்தவர் வட்டாரங்கள் அடிப்படையாகக் கொண்ட தொகுதிவாரி முறை மூலமும், மீதி 30% சத வீதமானவர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறை மூலமும் தெரிவு செய்யப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
-
மைண்ட் அப் மன்றத்தின் செய்இனி நிகழ்ச்சி
சப்னி பொத்துவில்: மைன்ட் அப் மன்றம் கடந்த 27 ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை பொத்துவில் மெதடிஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் காலை 9 மணி முதல் முழுநாள் நினைவாக ‘செய்இனி’ எனும் நிகழ்ச்சியை நடாத்தியது. மைன்ட் அப் மன்றமானது தேசிய ரீதியில் இயங்கி வருகின்ற ஒரு சமூக சேவை அமைப்பாகும். இவ்வமைப்பானது கல்வி, சுயதொழில் விருத்தி, சமூக நல்லிணக்கம், சூழற்பாதுகாப்பு, சுகாதாரம் என்ற ஐம் பெரும் விடயங்களை அடிப்படையாக கொண்டு தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறது.
-
ஈரானுக்கான தூதரை குவைத் மீள அழைத்தது
குவைத்: சவுதி அரேபியாவில் ஷியா உலமாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை அடுத்த பிராந்திய பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரானுக்கான தனது தூதுவரை குவைத் மீள அழைத்துள்ளது.சவுதி அரேபியா ஷியா உலமாவான நிம்ர் அல் நிம்ருக்கும் மேலும் 46 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றியதை அடுத்து, கடந்த சனிக்கிழமை ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டு, அதற்கு தீயும் வைக்கப்பட்டது.
-
உலகின் மிகப் பெரிய மாணிக்கம் இலங்கையில்
இரத்தினபுரி: உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணிக்கத்திற்கு புகழ்பெற்ற இரத்தினபுரி நகரில் அகழ்வொன்றிலிருந்து இந்த நீல மாணிக்கம் பெறப்பட்டதாக கொழும்பிலுள்ள மாணிக்க ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
-
காத்தான்குடி பாடசாலை ஒன்றில் இனம் தெறியாதோரால் பூட்டு!
ஜுனைட்.எம்.பஹ்த் காத்தான்குடி: புதிய காத்தான்குடி மட்/மம/ பாத்திமா பாலிக்கா வித்தியாலத்தில் இனம் தெறியாத நபர்களால் பூட்டு போடப்பட்டுள்ளது. இன்றைய தினம் புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவிருந்த கட்டிடத்திற்கே இவ்வாறு பூட்டுப்போடப்பட்டுள்ளது.
-
“ஈரான் யாத்திரிகர்களை சவூதி தடைசெய்யாது”
MJ றியாத்: சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்குமிடையில் தற்பொழுது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள முறுகல் நிலையையடுத்து, மக்காவிற்குள் நுழையும் ஈரானியர் சம்பந்தமான சந்தேகங்கள் சவுதியில் எழுந்திருந்தன. இந்நிலையில், |ஈரான் யாத்திரிகர்களை சவுதி தடைவிதிக்காது” என சவுதி அரேபிய வெளிநாட்டு அமைச்சர் ஆதில் அல் ஜூபைர் தெரிவித்துள்ளார்.
-
சவுதியை விட்டு ஈரான் ராஜீய அதிகாரிகள் வெளியேற 48 மணி நேரம் கால அவகாசம்
றியாத்: ஷியா உலமா ஒருவரின் மரண தண்டனையை சவுதி அரசாங்கம் நிறைவேற்றியது தொடர்பில் ஈரானுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையை அடுத்து, சவுதியை விட்டு ஈரானிய ராஜீய அதிகாரிகள் வெளியேறுவதற்கு சவுதி அரசாங்கம் நாற்பத்தெட்டு மணிநேரம் அவகாசம் கொடுத்துள்ளது.பயங்கரவாதம் தொடர்பிலான குற்றங்களுக்காக கடந்த சனிக்கிழமையன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாற்பத்தேழு பேரில் ஷேக் நிம்ர் அல் நிம்ரும் ஒருவர்.
-
மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய கணித, விஞ்ஞானப்பிரிவுகளிலிருந்து ஒன்பது மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி: வரலாற்று ஆய்வு
எம்ரீஎம் பாரிஸ் மீராவோடை: இலங்கை பரீட்சை தினணக்களம் வெளியிட்ட கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கோட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் கணித, விஞ்ஞானப்பிரிவுகளிலிருந்து ஒன்பது மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றுள்ளனர்.
-
முதற்தடவையாக மட்டு ஊடகவியலாளர்களுக்கு தனியார் பஸ்களில் பயணம் செய்யக் கூடிய இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பஸ்களில் பயணம் செய்யக் கூடிய இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை வழங்குமாறு கல்குடா மீடியா போரம் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க
-
ஈரானில் சவூதி தூதரகம் தாக்கப்பட்டது
தெஹ்ரான்: ஈரானின் பிரபலமான ஷியாப் பிரிவு உலமா ஒருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைபவேற்றியதை அடுத்து, தெஹ்ரானிலுள்ள சவுதி தூதரகத்துக்குள் ஈரானிய போராட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.அப்படி நுழைந்த அவர்கள் தூதரக் கட்டிடத்துக்கும் தீ வைத்துள்ளனர். எனினும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர்.