மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை!

Floodமட்டக்ளகளப்பு: இன்று காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையான 3 மணிநேரத்தில் 24.8 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகரி கே. மூரியகுமார் தெரிவித்ததர். தொடராக பெய்துவரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி, வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி ஏறாவூர் மட்டக்ளகளப்பு ஆரையம்பதி வாகரை உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் கடும் மழை பெய்துவருவதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

Flood

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் செவ்வாய் காலை 8.30 மணிமுதல் புதன் காலை 8.30 மணிவரையான 24 மணிநேரத்தில் மட்டக்களப்பில், 53.6 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment