Author: yourkattankudy.com
-
“ஐ எஸ் அமைப்பில் பல இலங்கையர் இணைந்துள்ளனர்”- பாதுகாப்பு அமைச்சு
கொழும்பு: இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்புடன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவ்வகையில் குறைந்தது 36 பேராவது சிரியா சென்றுள்ளது தமக்கு தெரியவந்துள்ளது என இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
-
பேரினவாதத்தின் மற்றுமொரு உதயம் “சிங்ஹலே”
AK-48 கொழும்பு: நேற்றிரவு நுகேகொடையில் முஸ்லிம்களின் வீட்டின் மதில்களிலும், வீட்டுக்கதவுகளிலும் “சிங்ஹலே” எனும் சொல் எழுதப்பட்டதானது, இலங்கையில் மீண்டும் பேரினவாதம் தலைதூக்கப்படுவதை எமக்கு எச்சரிக்கையாக விடப்பட்டிருக்கிறது.
-
சமூக நலன் பேணும் அமைப்பின் 6வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும் (Movement For Social Wellness) எனும் சமூக நலன் பேணும் அமைப்பின் 6 வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 03-01-2016 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
-
உயர் தரத்தில் உயர்ந்த இடம் பெற்றவர்கள்…
கொழும்பு: இன்று (03) வெளியான க.பொ.த. உயர் தர பரீட்சையில் அதிகூடிய இஸட் புள்ளிகைளப் பெற்று நாடாளவிய ரீதியில் முதலிடம் பெற்றோரின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வர்த்தக பிரிவில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற அகீல் மொஹமட் நாடாளவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் குருணாகலை மலியதேவ வித்தியாலயத்தின் மாணவராவார்.
-
ஹிஸ்புல்லாஹ்வை கழட்டிவிட்டாரா அப்துர் ரஊப் மௌலவி..??
AK-77 காத்தான்குடி: நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற அப்துர் ரஊப் மௌலவியின் ஆளுமையை நிரூபிக்கும் மீலாத் விழா நிகழ்வு விடயமாக ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மக்காவிலிருந்து ஒலிப்பதிவு மூலமான தனது மறுப்பறிக்கையை முகநூல் ஊடாக தெரிவித்திருந்தார்.
-
மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றின் உணவில் கரப்பான் பூச்சி
மட்டக்களப்பு: மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பொதுமகன் ஒருவர் பெற்றுச்சென்ற உணவில் கராப்பான் பூச்சு இறந்து கிடந்ததைக்கண்டு அது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமாரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-
மைத்திரி – மகிந்த எதிர்பாராத சந்திப்பு
கொழும்பு: ஸ்ரீலங்கா அமரபுர மகா சங்க சபையின் அதிசங்கைக்குரிய மகா நாயக்க தவுல்தென ஞானிஸ்ர தேரரின் நூறாவது ஜனன தின விழா வெள்ளி காலை நடைபெற்றது. நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் சமகால அரசியல் எதிரிகளாக மாறியுள்ள ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நீண்டகால
-
ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல் மீண்டும் வெளியாகிறது
மியூனிக்: ஹிட்லர் எழுதிய மெய்ன் காம்ஃப் (எனது போராட்டம்) நூல், 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் ஜெர்மனியில் கிடைக்கவிருக்கிறது. இந்த நூலின் பதிப்புரிமை பவேரியாவின் பிராந்திய அரசிடம் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, யூத எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை பதிப்பிப்பதை அந்த அரசு தடைசெய்தது.
-
ஆளுமைமிக்க மீலாத் விழாவுக்கு எதிர்ப்பு
AK-48 காத்தான்குடி: இன்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லா இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற இருக்கும் ஏ.ஜே. அப்துர் ரஊப் மௌலவி தரப்பினரின் மீலாத் விழாவுக்கு, இன்றைய ஜூம்ஆவின் பின்னர் அப்துர் ரஊப் மௌலவியை எதிர்க்கும் சிலர் இம்மீலாத் விழாவுக்கு காத்தான்குடி பிரதான வீதியில் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
-
புதுவருட உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் புதுவருடத்தில் தங்களது கடமைகளை ஆரம்பிக்கு முகமாக புதுவருட உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இன்று (01.01.2016) வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
சாய்ந்தமருது பீச் பார்க் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு; முதல்வர் அறிவிப்பு!
செயிட் ஆஷிப் சாய்ந்தமருது: சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்த பீச் பார்க்கின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு கல்முனை மாநகர சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருபது இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
-
கடவுச்சீட்டு கட்டணம் உயர்கிறது
கொழும்பு: புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் இன்று (01) முதல் அதிகரிக்கப்படவுள்ளன என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்கான கட்டணமாக 10,000 ரூபா அறவிடப்படவுள்ளது.