Author: yourkattankudy.com
-
நல்லாட்சி தொடர சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த துஆப் பிரார்த்தினையும் மரநடுகை நிகழ்வும் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
-
KCDAயினால் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் வைபவம்
KCDA ஊடகப்பிரிவு மீராவோடை: கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் வைபவம் 2016.01.08ஆந்திகதி வெள்ளிக்கிழமை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் KCDAயின் தலைவரும், மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபருமான ஜனாப். ஏ.எம். அன்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
-
தன்னைக் கொலை செய்ய முயற்சித்தவருடன் கைலாகு செய்த ஜனாதிபதி
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை, அவர் சுகாதார அமைச்சராக இருந்தவேளையில் கடந்த 2006 ஆம் ஆண்டு கொலை செய்ய முயன்ற விடுதலை புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த நபர் இன்று (08) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து மன்னிப்பு கோரினார்.
-
ஜனநாயக ஆட்சியின் ஓராண்டு பூர்த்தி
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ஆட்சியின் ஓராண்டு பூர்த்தியை நினைவுகூரும் இன்றையதினம் நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான தேசிய விழா இன்று (08)பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.
-
இன்றைய நாள் (ஜன.08)
உடும்பாக இருந்த குடும்பாட்சி ஒன்று தடம் புரண்ட நிகழ்வு இடம் பெற்ற நாள் இது. சாதி வெறி பேசி ஆதரவு தேடியோர் நாதியின்றிப் போக பேதி மருந்து கொடுத்த நாள்
-
‘இந்தியாவும் அமெரிக்காவும் தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்’ : பசில்
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக புதிய ஆட்சியைக் கொண்டுவருவதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
-
இஸ்லாமிய ஷரீஆவில் விபச்சாரிகளை கல்லெறிந்து கொல்வதன் காரணம் என்ன? (அத்தியாயம்-௦1)
முஹம்மது நியாஸ் இஸ்லாமிய மார்க்கத்தில் விபச்சாரக்குற்றத்திற்கு வழங்கப்படுகின்ற தண்டனை முறைகளைப் பற்றியும் அவை தொடர்பிலான காரண, காரியங்களையும் அலசுவதற்கு முன்னால் இந்த விபச்சாரம் என்னும் பாவகாரியம் நாம் வாழ்கின்ற சமூக, சமுதாய மட்டங்களில் எவ்வாறானதொரு பார்வையும் வடிவமும் பெற்றிருக்கின்றதென்பதை முதலில் பார்ப்போம்.
-
மேய்ச்சல்தரை தொடர்பில் நடவடிக்கை -பொலிஸ் மா அதிபர் கிழக்கு அமைச்சருக்கு கடிதம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சற்தரைப் பிரச்சினை தொடர்பில் மாகாண விவசாய அமைச்சர் பொலிஸ் மா அதிபர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகங்களில் நடைபெற்ற விவசாயக் கூட்டங்களின் பிரகாரம் மாதவணை, பெரியமாதவணை, நெளிகல் போன்ற மேய்ச்சற்தரைகளுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று திர்மானிக்கப்பட்டது.
-
நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி இன்று மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி, நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாசி வேண்டி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சமய அனுஷ்டானங்களும் மர நடுகை நிகழ்வுகளும் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெறவுள்ளன.
-
சமூக நலன் பேணும் அமைப்பின் தமிழ்,முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான கற்கை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சமூக நலன் பேணும் அமைப்பின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒன்றான வறிய மற்றும் திறமையான தமிழ்,முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வொன்று அண்மையில் காத்தான்குடியை அண்டியுள்ள ஐந்து பாடசாலைகளில் நடைபெற்றது.
-
“உன்னதமான மனிதர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியமைக்காக கவலையடைகிறேன்”
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பில் அரசியல்துறையின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் ஒன்று எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக தெரியவருகிறது. இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.