கொழும்பு: தனது வாகனத்தில் ஒட்டப்பட்ட சிங்க லே (சிங்க இரத்தம்) என பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை சிங்கள சாரதி ஒருவர் கழற்றி எறிவதை காணக் கூடிதாக உள்ளது. இந்த ஸ்டிக்கரை வாகனத்தில் ஒட்டியமையால் இரு வாரங்களாக தனக்கு எவ்வித ஓட்டங்களும் ( hire) கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முகப் புத்தகம் உள்ளிட்ட சமூக வலையமைப்புகளில் பல்வேறு வழிகளில் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் குறித்த அமைப்பின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனவாத முரண்பாட்டினைத் தோற்றுவிக்கும் அபாயம் உள்ளது. இலங்கையில் தனி சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பத்தில், ஸ்ரீ என்ற எழுத்து வாகனங்களில் பொறிக்கப்பட வேண்டுமென கட்டாயமாக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்கள் அவ்வாறான எழுத்து பெறிக்கப்பட்டதை அழித்து, தமிழில் எழுதத் தொடங்கினர், இது இனப்பிரச்சனைக்கான காரணிகளில் ஒன்றாக்கப்பட்டது. அது போலவே, சிங்க லே என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் அனேக வாகனங்களிலும் ஒட்டப்பட்டுள்ளமை இனப்பிரச்சினை ஏற்பட வழிவகுக்கும் என பெரும்பாலான மக்களிடையே பேசப்படுவதைக் காணலாம்.
Leave a comment