இலங்கை 3 ஓட்டங்களால் தோல்வி

newzealandமோன்கணி: இன்று (07) இடம்பெற்ற நியூஸிலாந்து கிரிக்கெட் அணியுடனான இருபதுக்கு இருபது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி நியூஸிலாந்தை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன்படி, துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 182 ஓட்டங்களை பெற்றது.

இதில், கப்தில் 58, வில்லியம்சன் 53 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களையே பெற்றது. இதில், தனுஷ்க குணதிலக 46, மிலிந்த சிறிவர்தன 42 ஓட்டங்களைப் பெற்றனர்.

இத்தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

newzealand

Published by

Leave a comment