Author: yourkattankudy.com
-
ஸ்ரீ .ல.மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் அவரவருடைய மாவட்ட மக்களின் குறைநிறையை கேட்டறிய வேண்டுமென்ற தலைவர் ரஊப் ஹக்கீமின் வேண்டுகோள் நிறைவேற்றம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் அம்பாறை: ஸ்ரீ .ல.மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் அவரவருடைய மாவட்ட மக்களின் குறைநிறையை கேட்டறிய வேண்டுமென்ற தலைவர் ரஊப் ஹக்கீமின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
-
மார்க்கிரட் தட்சரின் இறுதி சடங்குகளும் எழுந்த எதிர்ப்புக்களும்…
லண்டன்: பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரட் தட்சரின் இறுதிச்சடங்குகள் இன்று லண்டனின் செண்ட் போல்ஸ் பேராலயத்தில் நடந்தன. பிரிட்டிஷ் அரசி எலிசபத் உட்பட 2000க்கும் மேற்பட்ட அழைப்பு விடுக்கப்பட்டவர்கள், உலகெங்கிலிருந்தும் வந்து, இந்த அஞ்சலிப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-
உதவாத உள்ளுர் முஸ்லிம் அரசியல் தலைவர்களைப் புறக்கணித்து ஓர் முஸ்லிம் மாநாடு!
-AF47 கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அலரிமாளிகையில் 15 நாடுகளின் முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்து, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை எனவும், அவர்கள் தொடர்ந்து தங்களது, சமயம், கலாச்சாரம், உரிமைகளை இந்நாட்டில் கடைப்பிடித்தே வருகின்றனர் எனவும் நேற்றைய மாநாட்டில் தெரிவித்திருக்கின்றார்.
-
கதிர்காம பள்ளிவாசலில் ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம்!
கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை கதிர்காமம் புனித பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவசாலுக்குச் சென்று அங்கு கடமை புரியும் கதீபிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
-
ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்! -முஸ்லிம் நாடுகளிடம் ஜனாதிபதி உறுதி
கொழும்பு: இனவாதத்தை தூண்டும் அல்லது மத விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எவருக்கும் எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என 15 முஸ்லிம் நாடுகளின் ராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உறுதியளித்தார்.
-
இரத்தினபுரி தமிழர்களை பாதுகாத்திடுங்கள் என தொண்டமானுக்கு சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது:- மனோ கணேசன்
– FM. பர்ஹான் கொழும்பு: இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இரத்தினபுரி மாவட்ட வேவல்வத்தை போலிஸ் பிரிவில் அலுபொல தோட்டத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பெரும்பான்மை இன கோஷ்டி ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
-
மறைந்த தலைவர்;அஷ்ரப் கூறியது போல் மூவினங்களும் ஒன்றிணைந்து முத்தான பூமி ஒன்றை உருவாக்குவதற்கான காலம் தற்போது வந்துள்ளது-தே.ஐ.மு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: மறைந்த தலைவர் மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் தாம் வாழ்ந்த காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவுக்கென கடுமையாக உழைத்தவர். அவரது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமைக்கான, ஒன்றினைப்புக்கான கனவாகவே தேசிய ஐக்கிய முன்னணி உருவானது என மீண்டும் மீள்புணரமைப்பு செய்யப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகம் அ. அ. ஜெயராஜா தெரிவித்தார்.
-
மட்டு மாவட்டம் போதைப் பொருள் பாவனையில் இலங்கையில் முதலிடம்-தினமும் 85ஆயிரம் மதுபான சாராய போத்தல்கள் விற்பனை – சீ.யோகேஸ்வரன்
பாஸி பஹ்ஜான் மட்டக்களப்பு: இலங்கை நாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் போதை வஸ்த்து பாவணையில் குறிப்பாக மதுபானத்தில் முதலாவது இடத்திலுள்ளது போதைவஸ்த்து பாவனை ஒழிப்புக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டமொன்றை
-
இலங்கை நாடு பூர்வீக இந்து நாடு. அதன் பூர்வீக சமயம் இந்து சமயம்- த.தே.கூ. மட்டு பா-உ சீ.யோகேஸ்வரன்
– பாஸி பஹ்ஜான் மட்டக்களப்பு: இலங்கை நாடு பூர்வீகத்தில் இந்து நாடாகும். இந்து மதம் இலங்கையின் பூர்வீக மதமாகும் என மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
-
இந்து இளைஞர் பேரவையினால் ‘இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்’எனும் தொனிப் பொருளில் மட்டுவில் மூன்றுநாள் தலைமைத்துவ பயிற்சி நெறி
– பாஸி பஹ்ஜான் மட்டக்களப்பு: ‘இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் 2013 உயர்தரம் கற்கும் இந்து இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய கலாசார நிலைய மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற…
-
அமெரிக்காவுடன் இலங்கையின் உறவு என்ன? ‘லவ்வா? இழவா?’ – மனோ கணேசன்
FM. பர்ஹான் கொழும்பு: உள்நாட்டில் அமெரிக்காவை எதிர்த்து, அவர்கள் கொண்டு வந்த தீர்மானங்களை கணக்கிலும் எடுக்க மாட்டோம் என அமைச்சர்கள் ஜி.எல். பீரிசும், கெஹெலிய ரம்புக்வலவும் வீரம் பேசுகிறார்கள். ஆனால், அமெரிக்க அரசை கவர ஒருநாளைக்கு 116,000 டாலர்களை செலவழித்து நமது அமெரிக்க தூதுவர் விக்கிரமசூரியவும், மத்திய வங்கி ஆளுநர் கப்ராலும் அமெரிக்க தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதேவேளை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் மிசெயில் சிசன், இலங்கை தொடர்பாக மிகவும் கறாராக பேசியுள்ளார்.
-
சமுர்த்தி உதவிக்கொடுப்பனவு பெறுவதற்காக ஓட்டமாவடி சமுர்த்தி வங்கியில் வயது முதிர்ந்த பயனாளிகள் நீண்ட வரிசையில்
– பாஸி பஹ்ஜான் ஓட்டமாவடி: சமுர்த்திப் பயனாளிகளுக்கான உதவிக்கொடுப்பனவைப் பெறுவதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிக்கு முன்னால் இன்று புதன்கிழமை சுமார் முன்னூறுக்கும் அதிகமான பொது மக்கள் பெருந்திரளாக கூடியுள்ளனர்.