ஸ்ரீ .ல.மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் அவரவருடைய மாவட்ட மக்களின் குறைநிறையை கேட்டறிய வேண்டுமென்ற தலைவர் ரஊப் ஹக்கீமின் வேண்டுகோள் நிறைவேற்றம்

???????????????????????????????
BY: FM. Farhan

– பழுளுல்லாஹ் பர்ஹான்

அம்பாறை: ஸ்ரீ .ல.மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் அவரவருடைய மாவட்ட மக்களின் குறைநிறையை கேட்டறிய வேண்டுமென்ற தலைவர் ரஊப் ஹக்கீமின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.                                                                           

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் அவரவர் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்குச் சென்று அம்மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டதன் பிரகாரம் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக்குழுத் தலைவருமாகிய ஹரீஸ் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஹியாகான் மற்றும் பல அதிகாரிகள் சகிதம் சென்றிருந்தனர்.

???????????????????????????????
WWW.YOURKATTANKUDY.COM
???????????????????????????????
WWW.YOURKATTANKUDY.COM

அட்டாளைச்சேனை மக்களை சந்திக்கும் நிகழ்வு மாகாண சபை உறுப்பினர் நஸீர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய குழூ உறுப்பினர்கள் அண்மைக் காலங்களாக முஸ்லிம்களுக்கு இடம்பெற்றுவரும் அநியாயங்கள் சம்பந்தமாக அவர்களுடைய  ஆதங்கங்களை தெரிவித்ததோடு, கடந்த காலங்களில் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒதுக்கீடுகள் செய்த ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு இம் முறையும் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் மையவாடி சுற்றுமதில் அமைப்பதற்கும் மற்றும் அட்டாளைச்சேனை மத்திய கல்லுரியின் அபிவிருத்திக்கென கணிசமான அளவு நிதி ஒதுக்கீடு செய்வதாக இணங்கிக்கொண்டார்.

 அடுத்து பொத்துவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச சபை தவிசாளர் வாஸீத் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் கலந்து கொண்டதோடு, மண்மலை பிரச்சினை சம்பந்தமாகவும் கேட்டறிந்து கொண்டார். மேலும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து குறிப்பிட்ட ஒரு தொகையினை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்.

 மேலும் இறக்காமம் வரிப்பத்தாஞ்சேனை பிரதேச மக்களை சந்திக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் இறக்காமம் பிரதேச சபைத்தவிசாளர் நைசர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வரிப்பத்தாஞ்சேனை 03 குறிச்சி மகளிர் சங்கத்திற்கு ஒரு தொகை தையல் இயந்திரங்கள் வழங்கியதோடு,  அப்பிரதேசத்திற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதாகவும் இணங்கிக்கொண்டதோடு,  இறக்காமம் மத்திய குழு உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு இணங்கிக்கொண்டார்.   

Published by

Leave a comment