உதவாத உள்ளுர் முஸ்லிம் அரசியல் தலைவர்களைப் புறக்கணித்து ஓர் முஸ்லிம் மாநாடு!

muslim-countries-1[1]-AF47

கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அலரிமாளிகையில் 15 நாடுகளின் முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்து, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை எனவும், அவர்கள் தொடர்ந்து தங்களது, சமயம், கலாச்சாரம், உரிமைகளை இந்நாட்டில் கடைப்பிடித்தே வருகின்றனர் எனவும் நேற்றைய மாநாட்டில் தெரிவித்திருக்கின்றார்.

ஒரு போதும் மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், ஆதாரம் இருப்பின் தான் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தயார் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தி இருந்தார்.

மோசமான ஓர் அரசியல் காலகட்டத்தில் தனது அரசாங்கம் செல்வதை செவ்வனே உணர்ந்த ஜனாதிபதி அவர்கள், இந்நாட்டில் கலங்கத்தை ஏற்படுத்தி, அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளைப் படிப்படியாக மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது!

முஸ்லிம் அரசியல்வாதிகள் வாய்மூடி இருக்கலாம். எனினும் முஸ்லிம் பொதுமக்கள், முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் கைவைப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொண்டு இருக்கமாட்டார்கள் என உணர்ந்த அரசாங்கம், அவசர அவசரமாக தற்பொழுது சமாதானத்தை நோக்கி காய் நகர்த்தி வருகின்றது.

இலங்கை முஸ்லிம்களால் ஐரோப்பா மற்றும்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு தெரியப்படுத்திய  அழுத்தங்களும், கடிதங்களும், மகஜர்களும் இன்று உலகை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்திருக்கின்றது.

ஜனாதிபதி அவர்களின் நல்லெண்ண முயற்சியால் அல்லது அரசியல் அழுத்தத்தால் இத்தகைய ஓர் மாநாட்டை அவசரமாகக் கூட்டி, முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உறுதியளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

எனினும், ஜனாதிபதி அவர்களின் இம் மாநாட்டை அரசியல் பிழைப்பாக மாற்றி, இதுவரை முஸ்லிம்கள் விடயத்தில் வாய்மூடி குரல்வளையற்றிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், தனது முயற்சியால்தான் இத்தகைய ஓர் மாநாட்டை ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார் எனவும், இனிமேல் முஸ்லிம்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் கொக்கரிக்கலாம்.

எனவே, இலங்கை முஸ்லிம்களின் உரிமை மீறல்களை துணிந்து கண்டித்து, ஹர்த்தால் மூலம் உலகுக்கு வெளிக்காட்டிய இலங்கை முஸ்லிம் பொதுமக்கள், அரசியல்வாதிகளின் தந்திரங்களில் வீழ்ந்துவிடாது, மென்மேலும் ஒற்றுமையுடன் தங்களது பலத்தை தேவையேற்படின் மீண்டுமொரு முறை நிரூபிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறான அரசியல்வாதிகளின் கருத்துக்களை இனிமேலும் இந்நாட்டு முஸ்லிம்கள் கேட்க மாட்டார்கள் என்ற அடிப்படையிலேயே, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இம்மாநாட்டை ஜனாதிபதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்ததும் நல்லதொரு முடிவே!

ஒற்றுமையில்தான் வெற்றி இருக்கின்றது என்பது இன்று எமக்கு கற்றுத்தந்திருக்கும் நல்லதொரு படிப்பினை என்தை அனைவரும் உணரவேண்டும்! எமது அரசியல்வாதிகளுக்கும் உணர்த்தவேண்டும்!!

Published by

Leave a comment