– பாஸி பஹ்ஜான்
மட்டக்களப்பு: ‘இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் 2013 உயர்தரம் கற்கும் இந்து இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய கலாசார நிலைய மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளர் திரு.ந.புவனசுந்தரத்தின் நெறிப்படுத்தலின் கீழ் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெரும் இத்தலைமைத்துவ பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, இந்து சமய கலாசார நிலைய உத்தியோகத்தர் திருமதி எழில்வானி பத்மகுமார்,கிழக்க இந்து ஒன்றிய காந்தி சேவா சங்க செயலாளர் கதிர் பாரதிதாசன் மற்றும் பிரமுகர்கள்,க.பொ.த உயர்தர இந்து மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் ஆரம்ப நாளான இன்று புதன்கிழமை ‘இந்து ஆண்மீகத்தின் அன்றைய மெய்ஞானமே இன்றைய விஞ்ஞானம்’ ‘சுவாமி விவேகானந்தரின் பார்வையில் இந்து மதமும் இளைஞர்களும்’ ‘சமய விழுமியங்களில் முரண்பாடுகளைத் தீர்த்தல்’ ‘இந்த ஆலயக் கிரயைகள் எடுத்துக்காட்டும் ஆண்மீகத் தத்துவங்கள் எனும் தலைப்பில் சிறந்த வளவாளர்களால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை உட்பட மூன்று நாட்கள் இடம்பெறும் இத்தலைமைத்துவ பயிற்நெறியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment