Author: yourkattankudy.com
-
சீனாவில் பூகம்பம்: 56 பேர் பலி!
– MJ சிசியான்: சீனாவின் சிசியான் நகரில் இன்று இடம்பெற்ற 6.6 அளவிலான நில நடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்திருக்கின்றது.
-
பொஸ்டன் குண்டு வெடிப்பு: தப்பியவர் கைது!
பொஸ்டன்: அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் மாராதான் போட்டியில் வெடிகுண்டு வைத்த இரு சகோதரர்களில் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இன்று அவரது தம்பி கைது செய்யப்பட்டார். செக் குடியரசைச் சேர்ந்த தமேர்லான் சர்னயேவ் (26), ஷோக்கர் (19 இருவரும் கல்வி பயில சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள்.
-
கர்பலா பொலிஸ் காவலரண் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம்!
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் பொலிசாருக்கும் இளைஞர் அமைப்புக்களிடையே நல்லுறவைப் பேணும் வகையில் கர்பலா பொலிஸ் காவலரண் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசம் நேற்று வெள்ளிக்கிழமை மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
-
‘இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்’எனும் இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியை பூரத்தி செய்த இந்து இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ‘இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்’எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் 2013 உயர்தரம் கற்கும் இந்து இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியினை பூரத்தி செய்த இந்து இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய கலாசார நிலைய மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும்…
-
“ஹிந்து” என்றால் திருடன்: என்று பேசிய கருணாநிதிக்கு 4 நாட்களுக்குள் விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு!
-OIT சென்னை: “ஹிந்து” என்றால் திருடன் என்று பொருள் இருக்கிறது எனப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி 4 நாட்களுக்குள் விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் வேத அறிவியல் மையத்தின் சார்பில் பி.ஆர்.கௌதமன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
-
பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தின் 2013ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் உரை
காத்தான்குடி: மட்டக்களப்பு பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தின் 2013ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பிரதம அதிதி உரையின் ஒலி வடிவம் இங்கு இணைக்கப்படுகிறது.
-
கல்முனை கடற்கரையில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை கடற்கரை பிரதேசத்தில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் இன்று (19.04.2013) கரைவலை மீன் பிடிமூலம் பிடிக்கப்பட்டது. இம்மீன்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மொத்த வியாபாரியினால் கொள்வனவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
-
பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தின் 2013 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி: பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான பாலமுனை கிராமத்தில் இயங்கும் பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தின் 2013, வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை புதிய பாலமுனை முகைதீன் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ.ஹயறுல்லாஹ் தலைமையில் மிகக் கோலகலமாக இடம்பெற்றது.
-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இஸ்லாமிய மாநாடு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரர் தஃவா நிலையம் ஏற்பாடு செய்த இஸ்லாமிய மாநாடு ஒன்று இன்று 19.04.2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரர் ஜாமியுத் தௌஹீத் ஜும்மாப் பள்ளிவாயலில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரர் தஃவா நிலைய உபதலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.பி.எம்.அன்ஸார் (மதனி) தலைமையில் இடம்பெற்றது.
-
சவூதி அரேபியாவில் நிர்க்கதியான நிலையில் உள்ள சுமார் 5000 இலங்கையர்களை மீளழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-பூ.பிரசாந்தன்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சவூதி அரேபியாவில் வேலை வாய்ப்பிற்காக சென்று நிர்க்கதியான நிலையில் உள்ள சுமார் 5000 இலங்கையர்களை மீளழைப்பதற்கோ அல்லது வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கோ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இலங்கை அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
-
வியட்நாம் பயணமாகிறார் அமைச்சர் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், வியட்நாம் நீதியமைச்சர் ஹா ஹூங் குங்க்கின் அழைப்பை ஏற்று, உத்தியோகபூர்வ விஜயமொன்றை வியட்நாம் நாட்டிற்கு மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (19) இரவு பயணமாகின்றார்.
-
மாபெரும் சைக்கிளோட்டப்பட்டி இன்று காத்தான்குடி பிரதான வீதி வழியாக…
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தமிழ், சிங்கள புது வருடத்தை முன்னிட்டு ஒலிம்பிக் யூத் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சைக்கிளோட்டப்பட்டி இன்று வெள்ளிக்கிழமை மட்டு கல்முனை பிரதான நெடுஞ்சாலை காத்தான்குடி பிரதான வீதி வழியாக மட்டக்களப்புக்கு செல்வதையும் பொலிஸார் பாதுகாப்புக்காக செல்வதையும் படங்களில் காணலாம்.