
– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரர் தஃவா நிலையம் ஏற்பாடு செய்த இஸ்லாமிய மாநாடு ஒன்று இன்று 19.04.2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரர் ஜாமியுத் தௌஹீத் ஜும்மாப் பள்ளிவாயலில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரர் தஃவா நிலைய உபதலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.பி.எம்.அன்ஸார் (மதனி) தலைமையில் இடம்பெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் தொடர்ந்து ஆரம்பமாகி இரவு 10 மணி வரை இடம்பெற்ற இம்மாநாட்டில் ‘மறுமை வாழ்வை நோக்கிய ஒரு முஸ்லிமின் பயணம்’ எனும் தலைப்பில் மூத்த உலமாக்களில் ஒருவரான அஷ்ஷெய்க் எம்.எஸ்.அப்துல் வதூத் ஜிப்ரி, ‘முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமூகத்தின் பண்புகள்’ எனும் தலைப்பில் கல்குடா தௌஹீத் ஜமாஅத் தலைவர் ஏ.எல்.பீர் முஹம்மத்(காஸிமி), ‘பொறுமை ,தொழுகை,தவக்குல் மூலமாக அல்லாஹ்வின் உதவி’ எனும் தலைப்பில் பி.பீ.ஜாபிர்(ஷரபி), ‘தஃவாவின் முக்கியத்துவமும் அதை முன்னெடுப்பதில் சமகால சவால்களும்’ எனும் தலைப்பில் மருதமுனை தாறுல் ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.எம்.அஸ்பர் ஹஸன் (பலாஹி) ஆகிய சிறந்த உலமாக்களின் சொற்பொழிவுகள் அல்லாஹ்வின் உதவியால் வெகு சிறப்பாக இடம்பெற்றன.
பெண்களுக்கும் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டில் கலமுனை, மருதமுனை, ஏறாவூர், பாலமுனை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரர் தஃவா நிலையம் காத்தான்குடியில் பல்வேறு மார்க்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன் மக்களை ஆண்மீக ரீதியில் ஈடுபடச் செய்வதற்கு அர்ப்பணிப்புக்களையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment