பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தின் 2013 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி: பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதி

palamunai
BY: FM. Farhan

– பழுலுல்லாஹ் பர்ஹான்

 காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான பாலமுனை கிராமத்தில் இயங்கும் பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தின் 2013,  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை புதிய பாலமுனை முகைதீன் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ.ஹயறுல்லாஹ் தலைமையில் மிகக் கோலகலமாக இடம்பெற்றது.

இங்கு பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் ஓட்டம் அணி நடை, தேகப் பயிற்சி போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு  கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், மட்டக்களப்பு பிரதேச உதவிக் கல்விப் பணிப்பாளர் இப்றாஹீம், மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹாஜியானி எஸ்.ஏ.நஸிரா , மட்டக்களப்பு மத்தி கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் அப்துல் கபூர் மதனி காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் சுபைர், மண்முனை பற்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முபாறக் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள்  என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

 பேர்ள் Pearl, டயமன்ட் Diamond, கோல்ட் Gold ஆகிய மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு இடம்பெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு பிரதம அதிதி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கௌரவ அதிதிகளான மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் சுபைர், மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹாஜியானி எஸ்.ஏ. நஸிரா மற்றும் அதிதிகள் ஆகியோரினால் கின்னங்களும், பரிசில்களும், சான்றிதல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment