– பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: ‘இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்’எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் 2013 உயர்தரம் கற்கும் இந்து இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியினை பூரத்தி செய்த இந்து இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய கலாசார நிலைய மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியினை பூரத்தி செய்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரதம அதிதி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்பாஸ்கரன் மற்றும் அதிதிகளினால் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக சுpவசிரி சிவயோகச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியர் ,இந்து சமய கலாசார நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ,திருமதி எழில்வானி பத்மகுமார் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளர் திரு.ந.புவனசுந்தம், கிழக்கு இந்து ஒன்றிய காந்தி சேவா சங்க செயலாளர் கதிர் பாரதிதாசன் மற்றும் பிரமுகர்கள் க.பொ.த உயர்தர இந்து மாணவர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு புதிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட எஸ்.பாஸ்கரன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இங்கு மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியினை உதவி வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை உறுப்பினர்கள் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.



Leave a comment