கர்பலா பொலிஸ் காவலரண் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம்!

– பழுலுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் பொலிசாருக்கும் இளைஞர் அமைப்புக்களிடையே நல்லுறவைப் பேணும் வகையில் கர்பலா பொலிஸ் காவலரண் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசம் நேற்று வெள்ளிக்கிழமை  மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர்  எம்.எச்.ஏ. றஷீத்  தலைமையில் இடம்பெற்ற இவ் பாரிய  சிரமதான நிகழ்வில் கர்பலா பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி எஸ்.செல்வராசா மற்றும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை உறுப்பினர்கள் , கர்பலா பொலிஸ் காவலரணில் கடமையாற்றும் பொலிசார்  என பலரும் கலந்து கொண்டனர்.

 குறித்த ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு மட்டக்களப்பபு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கர்பலா, சிகரம் ,ஒல்லிக்குளம் ஆகிய குக் கிராமங்களில்  பாரிய சிரமாதனப் பணிகளை செய்து வருவதோடு மட்டுமன்றி கர்பலா கிராமத்தில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை  செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment