Month: May 2013
-
சிறுமியின் உயிரைக்காப்பாற்ற உதவுங்கள்
காத்தான்குடி: காங்கேயனோடை பதுர் பள்ளிவாயல் வீதியில் வசித்துவரும் அமீன் பாத்திமா நிஸா எனும் 5 வ யது சிறுமி இருத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இருதயத்தில் ஓட்டை எனவும் இதை உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
-
மதவாச்சி முதல் மடு வரைக்குமான புகையிரத சேவை ஆரம்பிக்கும் நிகழ்வில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சிங்கள மொழில் ஆற்றிய உரையின் முழு தமிழ் வடிவம்
– தொகுப்பு – இர்ஷாத் றஹ்மத்துல்லா (மதவாச்சி முதல் மடு வரைக்குமான புகையிரத சேவை ஆரம்பிக்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சிங்கள மொழில் ஆற்றிய உரையின் முழு தமிழ் வடிவத்தையும் வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.)
-
ரியூசனுக்குப் போயிட்டு வாரேன் உம்மா…
– சர்மிளா ஏ. காதர் எளில் கொஞ்சும் ஊர் என்று சொல்லாவிட்டாலும் ஓர் சமூக உணர்வுடன் வாழக்கூடிய ஓர் முஸ்லிம் ஊரில் வாழ முடிவதால் ஓரளவு எனக்குள் மகிழ்ச்சியடைகிறேன்.
-
வெசாக் வாரம் அனுஷ்டிப்பு!
கொழும்பு: இம்மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படும். இதனை முன்னிட்டு, இந்த வாரத்தில் அரசாங்க கட்டடங்களில் பௌத்த கொடிகளை பறக்க விடுமாறும் அரச அலுவலகங்களில் பௌத்த அலங்காரங்களை மேற்கொள்ளுமாறும் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிக்கிறது.
-
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான கையேடு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (FREE TRADE AGREEMENT) தொடர்பான முழுமையான தகவல் அடங்கிய கையேடு (HAND BOOK) ஒன்றை இலங்கை கொள்கை வகுப்பு கற்கை நிலையம், மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயம் என்பன இணைந்து தயாரித்துள்ளது.
-
இந்திய உயர் ஸ்தானிகருக்கு விசேட பிரியாவிடை
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையில் தமது பணிகளை முடித்துக் கொண்டு மீண்டும் இந்தியாவின் ஆசிய பிராந்தியத்துக்கான செயலாளராக நியமனம் பெற்றுச் செல்லும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காண்த்தா அவர்களுக்கு நேற்று இரவு கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் விசேட பிரியாவிடை வைபவமொன்றை நடத்தினார்.
-
சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட யுத்த சூனிய வலயம்- இலங்கையின் கொலைக்களங்கள் காணொளிகள் தொடர்பில் விளக்கமளிக்கவும்: பி.எம்.அம்சா
கொழும்பு: பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட யுத்த சூனிய வலயம்- இலங்கையின் கொலைக்களங்கள் காணொளிகள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதரகத்தின் தலைமைப் பிரதிநிதி பி.எம்.அம்சா பிரித்தானியாவின் தொலைக்காட்சி சேவையிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கொகா-கோலாவின் இரகசியம் 1.5 கோடி!
நியூயோர்க்: பழம்பொருட்களில் கிடைத்த ‘கொகா-கோலா’ தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டொலருக்கு இண்டர் நெட்டில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
ஸ்பொட் பிக்ஸிங்கும்..மெட்ச் பிக்ஸிங்கும்….
சென்னை: உலகையே ஒரு நேரத்தில் பெரும் பரபரப்பாக்கிய கிரிக்கெட் ஸ்பொட் பிக்ஸிங் தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளது. இந்த முறை பிரபலமான கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் சிக்கியிருப்பதால் மக்கள் பெரும் அதிர்ச்சியி்ல் முழ்கியுள்ளனர்.முன்பு மெட்ச் பிக்ஸிங்தான் பிரபலமாக இருந்தது.
-
‘இலங்கை மாநாட்டில் கலந்துகொள்வதான முடிவு சர்ச்சைக்குரியது’ – பிரிட்டிஷ் துணைப் பிரதமர்
லண்டன்: இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரிட்டனின் முடிவு சர்ச்சைக்குரியது என்று பிரிட்டிஷ் துணைப் பிரதமரும் லிபரல் டெமொகிரடிக் கட்சியின் தலைவருமான நிக் கிளெக் கூறியுள்ளார்.
-
க.பொ.த. (உ/த) வகுப்புகள் ஜுலை 15 முதல் ஆரம்பம்
கொழும்பு: இவ்வருடத்துக்கான க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் ஜுலை 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமனம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.