சென்னை: உலகையே ஒரு நேரத்தில் பெரும் பரபரப்பாக்கிய கிரிக்கெட் ஸ்பொட் பிக்ஸிங் தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளது. இந்த முறை பிரபலமான கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் சிக்கியிருப்பதால் மக்கள் பெரும் அதிர்ச்சியி்ல் முழ்கியுள்ளனர்.முன்பு மெட்ச் பிக்ஸிங்தான் பிரபலமாக இருந்தது.
இப்போது ஸ்பொட் பிக்ஸிங்தான் விளையாட்டு உலகில் பிரபலமாகியுள்ளது. மெட்ச் பிக்ஸிங்கை விட இந்த ஸ்பொட் பிக்ஸிங் ரொம்ப ஈசியானது என்பதால்தான் இதை புக்கிகள் எனப்படும் போட்டியின் முடிவை நிர்ணயிக்கும் சூதாடிகள் விரும்புகிறார்கள்.
மெட்ச் பிக்ஸிங்:
மேட்ச் பிக்ஸிங் என்பது ஒரு போட்டியையே மொத்தமாக தங்களது விருப்பத்திற்கு ஆதரவாக திருப்புவது. இதற்கு நிறைய செலவாகும் என்பதோடு அத்தனை முக்கிய வீரர்களும் உடன்பட வேண்டும் என்பதும் அடங்கும்.
ஸ்பொட் பிக்ஸிங்:
ஸ்பொட் பிக்ஸிங் என்பது ஒரு சில விஷயங்களை மட்டும் தங்களுக்கு சாதகமாக செய்ய வைப்பதாகும். அதாவது குறிப்பிட்ட ஒருவரில் ஒரு ‘நோ போல்’ அல்லது ‘வைட்’ போன்றவற்றை வீசச் செய்வது. இதற்காக அந்தக் குறிப்பிட்ட பந்துவீச்சாளருக்கு மட்டும் பணம் போகும்.
துடுப்பாட்ட வீரர்களையும் விலைக்கு வாங்கலாம். அதேபோல குறிப்பிட்ட முக்கியமான துடுப்பாட்ட வீரரரையும் ஸ்பொட் பிக்ஸிங்குக்கு இழுத்து அவரையும் சாதகமாக மாற்றுகிறார்கள். குறிப்பிட்ட துடுப்பாட்ட வீரரிடம் வழக்கம் போல விளையாடாமல் மாற்றி விளையாடுமாறும், பிடி எடுப்பதற்கு எதுவாக பந்தை அடிக்குமாறும் கேட்டுக் கொள்வார்கள்.
செலவு குறைய, லாபம் அதிகம்:
இப்படிப்பட்ட குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பிக்ஸ் செய்வதன் மூலம் அத்தனை பேருக்கும காசு தர வேண்டிய அவசியம் கிடையாது. அதேசமயம், தாங்கள் நினைப்பதையும் சாதிக்க முடியும் என்பதால் இப்போதெல்லாம் இதைத்தான் புக்கிகள் விரும்புகிறார்கள்.
![2010_9_14-2010_9_14_3_19_32-jpg-26947[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/2010_9_14-2010_9_14_3_19_32-jpg-269471.jpg?w=302&h=335)
Leave a comment