பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமனம்

hizbullah– பழுளுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்  செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சராக இருக்கும் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த சுமார் ஒரு வார காலம் கொரியாவில் இடம்பெறும் ஆசிய மகளிர் விவகாரங்களுக்கான உயர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் கொரியா சென்றுள்ளதையிட்டு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதியினால் தற்காலிகமாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறித்த அமைச்சர் நாடு திரும்பும் வரை பதில் அமைச்சராக கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment