கொழும்பு: இவ்வருடத்துக்கான க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் ஜுலை 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பிலான சுற்றறிக்கை சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குறிப் பிட்ட அமைச்சர், சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களது பெயர் பட்டியலை அதிபர்கள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னதாக அமைச்சின் அல்லது மாகாண செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் சுற்றறிக்கையினை மீறிச் செயற்படும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அமைச்சு ஒருபோதும் தயங்காது எனவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கென இவ்வருடம் முதல் தகவல் தொழில்நுட்பம் புதியதொரு பாடமாக அறிமுகப்படுத்தப்படுவதால் இவர்களில் அநேகமானவருக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பு அதிகமெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப் பிட்டார்.
கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் உயர்தரம் கற்பதற்காக வேறு பாடசாலை களில் சேர்த்துக் கொள்வது தொடர்பில் கல்வியமைச்சினால் விசேட சுற்றறிக்கை யொன்று அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன டிப்படையில், அதே பாடசாலையில் சாதாரண தரம் வரை படித்து விசேட சித்தி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு முதலிடமும் கஷ்டப் பிரதேசங்களைச் சேர்ந்த விஞ்ஞானம், கணிதம் ஆகிய துறைகளைக் கற்க விரும்பும் மாணவர் களுக்கு இரண்டாம் இடமும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்றாம் இடமும் ஆட்சேர்ப்பின் போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமென அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
அத்துடன் உயர் தரத்துக்கான ஆட்சேர்ப்பு முறையினைக் கண்டித்து உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டி ருப்பதாகவும் அது தொடர்பில் நியாயமான தீர்மானம் கிடைக்குமென எதிர்பார்ப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இலங்கைப் பிரஜைகளை உருவாக்குவதே எமது இலக்கு ஆகும். அந்த வகையிலேயே, தகவல் தொழில் நுட்பத்தினை க.பொ.த. உயர்தர மாண வர்களுக்காக அறிமுகம் செய்துள்ளோம்.
ப்பாடத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. இப்பாடம் அறிமுகம் செய்துள்ளமையானது இவ்வருடம் உயர் தரம் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கிடைத்த மாபெரும் சந்தர்ப்பமாகும். முதல் கட்டமாக 200 பாடசாலைகளிலேயே இதனை அறிமுகப்படுத்தவுள்ளோம். இந்தத் திட்டத்தினை பாராட்டியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, இதற்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கவென 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் இந்த 200 பாடசாலைகளில் ஒவ்வொன்றும் 10 கோடி ரூபா பெறுமதியான தகவல் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டிருக்கும் வகையில் நாம் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றோம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இப்பாடத்திட்டத்தினை ஏற்றுக்கொண்டிருப்பதனால் தகவல் தொழில்நுட்பத்தினை தெரிவு செய்யும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே, வாய்ப்பு கிடைக்கும் மாணவர்கள் தமது தகைமை விருப்பத்துக்கு ஏற்ப தவறாது இப்பாடத்தை தெரிவு செய்வது சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்குமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
-தினகரன்
Leave a comment