Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஒபாமாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளை முடக்கிய சிரியா

    டமஸ்கஸ்: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள் நேற்று பல மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர். இந்த பக்கங்களை பார்வையிடுவதற்காக இணைப்புகளை கிளிக் செய்த நபர்கள், சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணைய இணைப்புக்கு திசை திருப்பப்பட்டனர்.

  • உலமாக்களுக்குடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண தௌஹீத் உலமாக்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு காத்தான்குடியில்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் மாகாணத்திலுள்ள தௌஹீத் உலமாக்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடாபி ஹோட்டல் ஒன்று கூடல் மண்டபத்தில்  இடம்பெற்றது.

  • 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்; தொடக்க ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

    டாக்கா: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை சந்திக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் அடுத்த ஆண்டு (2014) மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று முன்தினம் அறிவித்தது.

  • கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை 13 மணித்தியாலத்தில் 11,000 வாகனங்கள்: ரூ 30 இலட்சம் வருமானம்

    கொழும்பு: கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்ட முதல் 13 மணித்தியாலத்தில் 11 ஆயிரம் வாகனங்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியது. இதன் மூலம் 30இலட்சம் ரூபா வருமானம் பெறப் பட்டதாக வீதி அபிவி ருத்தி அதிகார சபை, அதிவேக நெடுஞ் சாலை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பிரிவு மேலதிக பணிப்பாளர் ஆர்.ஏ.பீ. கஹடபிடிய தெரிவித்தார்.

  • சரவணபவான் எம்பியும் சிலரும் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

    யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில், இராணுவ உயர் பாதுகாப்புப் பிரதேசத்தின் உள்ளே, பொதுமக்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதாக முறையிடப்பட்டதை அடுத்து, அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் மீது திருப்பப்படும் இனவாதம்!

    – ஆபூ அஸ்ஜத் வடக்கு முஸ்லிம்கள் இழந்தவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டிய காலத்தினை தவறவிட்டுவிட்டு அதனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கும் தலைமைகளை இனவாதியாக காட்டிவிட்டு இன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கிலும் அதற்கு வெளியிலும் சிறுபான்மை மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்

  • ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கா-குடி கிளையின் ஏற்பாட்டில் க.பொ.த. சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காங்கேயனோடை: ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மாணவர்கள், இளைஞர்களின் அறிவு, ஆன்மீகம், திறன் என்பவற்றை விருத்தி செய்யும் நோக்கோடு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்றுது.

  • மட்டக்களப்பு நகரில் லயன்ஸ் கழகத்தினால் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: 15-10-2013 திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு லயன்ஸ் கழகமும் கிழக்கு பிராந்திய தேசிய விழிப்புலனற்றோர் சம்மேளனமும் இணைந்து நடாத்திய வெள்ளைப்பிரம்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் ஜே. சுதர்சன் தலைமையில் 28-10-2013 இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

  • பொலிவேரியன் பிரதேசத்தின் பின்புறத்தில் வெளிச்சம் கூடிய போகஸ் லைட்கள் பொருத்தப்பட்டது

    பழுலுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் பணிப்புரைக்கு அமைய சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தின் பின்புறத்தில் வெளிச்சம் கூடிய போகஸ் லைட்கள் இன்று (28.10.2013) மாலை பொருத்தப்பட்டது. மேற்படி லைட்களை பொருத்தும் வேலை மேயர் சிராஸின் மேற்பார்வையில் நடைபெற்றது.

  • இன நல்லுறவை மேம்படுத்தல் எனும் கருப்பொருளில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மஞ்சன்தொடுவாய் பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு செயலமர்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மஞ்சந்தொடுவாய்: ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மாணவர்கள், இளைஞர்களின் அறிவு, ஆன்மீகம், திறன் என்பவற்றை விருத்தி செய்யும் நோக்கோடு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றுது.

  • P67799159 என்ற தொடர் இலக்கத்தை கொண்ட 2ஆயிரம் ரூபா நாணயத்தாள் கிடைத்தால் பொலிஸாருக்கு அறிவிக்கவும்

    சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மாலபே பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதோடு பணம் அச்சிட்ட அச்சகமும் இன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அனைத்தும் போலி நாணயத் தாள்களும் இரண்டாயிரம் ரூபா நாணய தாள்கள் என பொலிஸ் குற்ற புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

  • ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் சமூக சேவைப் பிரிவினரின் ஏற்பாட்டில மனிதநேயம் பேணும் இரத்ததான முகாம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் சமூக சேவைப் பிரிவினரின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை27 மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாமொன்று ஏறாவூர் அல் அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

←Previous Page
1 … 901 902 903 904 905 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar