மஞ்சந்தொடுவாய்: ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மாணவர்கள், இளைஞர்களின் அறிவு, ஆன்மீகம், திறன் என்பவற்றை விருத்தி செய்யும் நோக்கோடு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றுது.
இதனடிப்படையில் பொது வேலைத்திட்டங்களில் மாற்று மத சகோதரர்களையும் இணைத்து செயற்படுவதனூடாக இன நல்லுறவை மேம்படுத்தல் எனும் கருப்பொருளின் இவ் மாணவர் இயக்கத்தின் வருடாந்த நிகழ்வுகளில் ஒன்றான இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு எவ்வாறு பரீட்சைக்கு முகங்கொடுப்பது? , சுய ஊக்கமளிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு கடந்த வியாழக்கிழமை மஞ்சன்தொடுவாய் பாரதி தமிழ் வித்தியாலயத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளை அமைப்பாளர் இஸட். எம். சஜி தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பரீட்சைக்கு முகங்கொடுப்பது? எனும் தலைப்பில் பேராதனை பல்கலைக்கழக மைக்ரோ பயோலோஜி பிரிவு மாணவன் முஹமட் ஸப்றாஸினால் விரிவுரை நிகழ்த்தப்பட்டதுடன் , சுய ஊக்கமளிப்பு எனும் தலைப்பில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் எம். இம்ரான் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்து பீட மாணவன் எம்.ரிசா ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் செயலமர்வில் இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ மாணவிகள் ,மஞ்சன்தொடுவாய் பாரதி வித்தியாலய அதிபர் அருளானந்தம் ,ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடிக்கிளை உறுப்பினர்கள், ஆசிரிய ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment