காத்தான்குடி: காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் மாகாணத்திலுள்ள தௌஹீத் உலமாக்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடாபி ஹோட்டல் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொழும்புப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் யூனானி வைத்தியருமான டாக்டர் ரயிஸுத்தீன் (ஷரயி), காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபரும் சொற்பொழிவாளருமான அஷ்ஷெய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன்(பஹ்ஜி),மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக்(மதனி),கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் அஷ்ஷெய்க் பீர் முஹம்மத்(காஸிமி), மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர்களான அஷ்ஷெய்க் அஸ்பர் ஹஸன் (பலாஹி), அஷ்ஷெய்க் ரியாழ்(காஷிபி),காத்தான்குடியைச் சேர்ந்த அஷ்ஷெய்க் நாஸர் (ஜமாலி),மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தௌஹீத் உலமாக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ‘முரண்பாடுகளை எவ்வாறு கையாள்வது’ எனும் தலைப்பில் தாறுல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக்(மதனி), ‘அழைப்பாளிகளிடம் இருக்க வேண்டிய பண்புகளும் விழுமியங்களும்’ எனும் தலைப்பில் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன்(பஹ்ஜி), ‘அழைப்பாளிகளின் பொறுப்புக்களும் கடமைகளும்’ எனும் தலைப்பில் கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் அஷ்ஷெய்க் பீர் முஹம்மத்(காஸிமி) ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தப்பட்டதுடன் கொழும்புப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் யூனானி வைத்தியருமான டாக்டர் ரயிஸுத்தீன் ஷரயியினால் நவீன இஸ்லாமிய மென்பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
உலமாக்களுக்குடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் மாகாண மட்டத்திலுள்ள சகல உலமாக்களையும் ஒரே குடையின் கீழ் ஒன்று கூட்டி பல வேலைத்திட்டங்களை காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண தௌஹீத் உலமாக்கள் ஒன்றியம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment