மட்டக்களப்பு: 15-10-2013 திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு லயன்ஸ் கழகமும் கிழக்கு பிராந்திய தேசிய விழிப்புலனற்றோர் சம்மேளனமும் இணைந்து நடாத்திய வெள்ளைப்பிரம்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் ஜே. சுதர்சன் தலைமையில் 28-10-2013 இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
இவ் ஊர்வலம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமாகி மட்டு-நகர மணிக்கூட்டுக் கோபுரம், திருமலை வீதி, புகையிரத நிலைய வழியாக மட்டக்களப்பு- கோட்டைமுனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியை சென்றடைந்தது.
இவ் ஊர்வளத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் , மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி அதிபர் , மட்டக்களப்பு லயன்ஸ் கழகப் பணிப்பாளர் ஏ. செல்வேந்திரன், தேசிய விழிப்புலனற்றோர் சம்மேளனத்தின் தலைவர் எம். வடிவேல், லயன்;சபையின் பிரதி செயலாளர் என். வி. ரஞ்சன், சம்மேளத்தின் செயலாளர் தயராஜ் ,மட்டக்களப்பு லயன்ஸ் கழக பிரதிநிதிகள், ஆண்.பெண் விழிப்புலனற்றோர் என பலரும் கலந்து கொண்டார்.
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி கடந்த 1992 முதல் இவ்வாறான விழிப்புணர்வு ஊர்வலங்களை மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment