கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை 13 மணித்தியாலத்தில் 11,000 வாகனங்கள்: ரூ 30 இலட்சம் வருமானம்

Colombo-Katunayake-Expressway600-580x246[1]கொழும்பு: கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்ட முதல் 13 மணித்தியாலத்தில் 11 ஆயிரம் வாகனங்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியது. இதன் மூலம் 30இலட்சம் ரூபா வருமானம் பெறப் பட்டதாக வீதி அபிவி ருத்தி அதிகார சபை, அதிவேக நெடுஞ் சாலை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பிரிவு மேலதிக பணிப்பாளர் ஆர்.ஏ.பீ. கஹடபிடிய தெரிவித்தார்.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று முன்தினம் காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6.00மணி முதல் நள்ளிரவு 12.00 மணியான முதல் 6 மணி நேரத்தில் மாத்திரம் 23இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கொழும்பு கட்டுநாயக்க இடையிலான இ.போ.ச. பஸ் சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டன. 13 இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு 10 தனியார் பஸ்களுக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

இ.போ.ச. பஸ் சேவையை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆரம்பித்து வைத்தார்.

– TK

Published by

Leave a comment